மறு அறிவித்தல் வரும் வரை மூடல் » Sri Lanka Muslim

மறு அறிவித்தல் வரும் வரை மூடல்

IMG_20190710_134731

Contributors
author image

Editorial Team

ருஹுணு பல்கலைக்கழகத்தை மறு அறிவித்தல் வரும் வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கூறியுள்ளார்.

அதன்படி இன்று பிற்பகல் 04.00 மணி முதல் பல்கலைக்கழகம் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் அங்கிருந்து வௌியேற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ருஹுணு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க பிரதிநிதிகளுக்கும் கல்விசாரா ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த மோதல் காரணமாக பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புக்காக இன்றைய தினம் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Web Design by The Design Lanka