அதனை அரசியல் அழுத்தம் ஊடாக சாதிக்க முயல்வதும் தவறு..! » Sri Lanka Muslim

அதனை அரசியல் அழுத்தம் ஊடாக சாதிக்க முயல்வதும் தவறு..!

FB_IMG_1562897790246

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

மருத்துவர் ஷாபிக்கு .. எம் கண்முன்னே நேர்ந்துகொண்டிருக்கும் அநீதிக்கு எதிராக எழும் நெஞ்சக்குமுறலின் ஏதோ ஒரு வடிவம் தான் அலைமோதும் உணர்வலைகள். எல்லோரது எண்ணமும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பதுதான். ஆனாலும், உணர்வு மேலோங்கிய எண்ண வெளிப்பாடுகளை இன்னும் நிதானப்படுத்த வேண்டியது அவசியம்.

ஷாபி விவகாரத்தில் பல முனைகளில் அவதானித்துக் கொண்டிருக்கிறோம். தகவலாக வெளியே சொல்லக்கூடியவற்றை நாம் சோனகர் இணையத்திலும் முடிந்தவர்கள் வேறு இடங்களிலும் கூட பதிவிடுகிறார்கள். நேற்றைய வழக்கு ஆரம்பிக்க முன்பதாகவே வழக்கின் வடிவம் இடியப்பப் பின்னலாக்கப்பட்டிருப்பதை உணரக்கூடியதாக இருந்தது.

மருத்துவர் ஷாபி.. பல முனைகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார் என்பது மாத்திரமன்றி அவை ஒவ்வொன்றும் சிக்கலான முறையில் பின்னிப் பிணையப்பட்டுள்ளது என்பதை என்னோடு தொடர்பில் உள்ள சில முக்கியஸ்தர்கள் முன்னரே சுட்டிக்காட்டினார்கள்.

நேற்றைய வழக்கு விசாரணையின் போதும் .. ஏனைய விவகாரங்களுக்கும் தெளிவு கிடைக்காமல் ஷாபியை வெளியே விட முடியாது என்பதே நீதிபதியின் நிலைப்பாடாக இருந்தது. ஒரு வகையில் அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை என்பது நிரூபணமாகி அவர் விடுவிக்கப்படுவதே அவருக்கும் அவரது குடும்பத்தின் எதிர்காலத்துக்கும் நல்லது. ஆயினும், அவர் அனுபவிக்கும் துன்பத்துக்கு ஆறுதல் வார்த்தைகளும் இல்லை.

இந்நிலையில் உங்கள் பிரார்த்தனைகளில் அன்னாரையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.. என்ற கோரிக்கையைத் தவிர வேறு எதையும் முன் வைக்க முடியாது. பக்கசார்பாகவே சட்டம் நடந்து கொண்டாலும் அதனை சட்டரீதியாகவே வெல்ல வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதனால் அது ஒன்றே வழி.. அதனை அரசியல் அழுத்தம் ஊடாக சாதிக்க முயல்வதும் தவறு..!

Irfan Iqbal

Web Design by The Design Lanka