சூழ்ச்சி தோல்வி..! லங்கா ஈ நியூஸ் » Sri Lanka Muslim

சூழ்ச்சி தோல்வி..! லங்கா ஈ நியூஸ்

IMG_20190712_080034

Contributors
author image

Editorial Team

சிலரது தனிப்பட்ட தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ள நீதிமன்றை பயன்படுத்த இடமளிக்க முடியாது..! பூஜித்த, ஹேமஸ்ரீயை பிணையில் விடுவித்த நீதிபதி..! கமராலா மற்றும் தப்புலவின் சூழ்ச்சி தோல்வி..! (அம்பலம்)
-சந்திர பிரதீப் எழுதுகிறார்..“சில நபர்களின் தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவென நீதிமன்றத்தை பயன்படுத்த இடமளிக்க முடியாது” என பகிரங்க நீதிமன்றில் அறிவித்த கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜெயரத்ன நீதிமன்ற வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தி ஜனாதிபதி கமராலா மற்றும் சட்டமா அதிபர் தப்புத் லிவேரா ஆகியோரின் தேவைக்கு ஏற்ப இயேசு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் என்ற சந்தேகத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமஸ்ரீ பெனாண்டோ ஆகியோரை தலா ஐந்து லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்துள்ளார்.

நீதிமன்றத்தில் முதலில் தாக்கல் செய்யப்பட்ட ‘பி’ அறிக்கையை தொடர்ந்து மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட விரிவான அறிக்கையை ஆராய்ந்த பின்னரே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். (விரிவான அறிக்கை குறித்து பின்னர் பேசலாம்)

இங்கு சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் துசித் முதலிகே சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குற்றவியல் சட்டத்தின் 296 சரத்தின் கீழ் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கும் நிலையில் பிணை வழங்குவதற்கு நீதவானுக்கு அதிகாரம் இல்லை என்றும் மேல் நீதிமன்றத்திலேயே பிணை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கூறியுள்ளார்.

விளக்கமறியலில் வைத்தது மாத்திரமன்றி கைது செய்ததும் சட்டவிரோதமானது…
————————————–
அதற்கு பதிலளித்த பிரதான நீதவான் லங்கா ஜெயரத்ன பிணை வழங்குவது மாத்திரமன்றி குறித்த இருவர் மீதும் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டதும் சட்டவிரோதமான செயல் என்று குறிப்பிட்டார். கொலைக் குற்றச்சாட்டின் போதும் சந்தேகநபர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் ஆனால் இங்கு அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என்றும் நீதிவான் விளக்கமளித்தார்.

நீதவான் தீர்ப்பு வழங்கும் போது சட்டமா அதிபருடன் தொடர்புபட மாட்டார்…
————————————–
சந்தேக நபர் ஒருவருக்கு பிணை வழங்குவது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் போது சட்டமா அதிபரின் ஆலோசனை பெற வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் அவருடனான தொடர்பு அவசியமற்றது எனவும் நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் பழைய வழக்கு தீர்ப்புகள் சிலவற்றை உதாரணமாக காட்டிய நீதவான் முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க வழங்கிய தீர்ப்பு ஒன்றை எடுத்துக் காட்டி “போலீசார் கேட்டுக் கொள்வதற்காக மாத்திரம் அன்றி வேறு பிரிவினரின் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் ஒருவரை விளக்கமறியலில் வைக்க முடியாது” என்ற சொற்பதத்தை நீதவான் அடிக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

லங்கா ஈ நியூஸ் குற்றச்சாட்டையே நீதவானும் கூறினார்…
————————————–
லங்காஈநியூஸ் கடந்த ஆறாம் திகதி IODPP நிறுவனத்தின் அறிக்கை ஒன்றை மேற்கோள் காட்டி “நாட்டின் பொலிஸ் மா அதிபரை சிறையில் வைத்தது பாடசாலை ஒன்றின் சாகித்திய சங்கத்தின் அறிக்கை போன்ற சட்ட வலுவற்ற அறிக்கை ஒன்றின்படி ஆகும். சிறிசேனவின் மூன்று நபர்கள் அடங்கிய விசாரணை குழு வர்த்தமானியில் வெளியிடப்படவில்லை” என்று முதலாவதாக நாம் செய்தி வெளியிட்ட பின்னர் அதில் உள்ள விடயங்களை பிரதான நீதவான் லங்கா ஜெயரத்ன நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு ஒன்றின் அறிக்கையை அடிப்படையாக வைத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதவான், அந்த குழுவின் அறிக்கை சட்ட ரீதியானது அல்ல என தெரிவித்தார். ஜனாதிபதியின் விசாரணைக் குழு சட்ட ரீதியானதா என்று பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லியனகேவிடம் வினவியபோது அதற்கு பதில் அளித்த அவர், ஜனாதிபதி விசாரணைக் குழு சட்டமூலம் ஒன்றை அடிப்படையாக வைத்து நியமிக்கப்பட்டது அல்ல எனவும் அது வர்த்தமானியில் வெளியிடப்படவில்லை என்றும் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தகவல் அறிந்து கொள்ள ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு என்றும் தெரிவித்தார்.

இந்த அளவு முக்கிய தகவல் வழங்குவது வாட்ஸ் ஆப் மஹிந்த?
————————————–
அரச புலனாய்வு சேவை (SIS) பணிப்பாளர்் தாக்குதல் நடத்தப்பட இருப்பதாக கூறி எழுதப்பட்ட கடிதங்கள் சந்தேக நபர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு இருந்தாலும் அந்தக் கடிதங்களில் குறிப்பிட்ட தினத்தில் இந்த தாக்குதல் நடத்தப்படும் என்பது தொடர்பில் தகவல்கள் வெளியிடப்பட்டிருக்க இல்லை எனக் கூறிய நீதவான், அரச புலனாய்வுச் சேவையை பிரதானி தாக்குதல் நடத்தப்பட்ட தினத்தில் இந்த சந்தேக நபர்கள் இருவருக்கும் வட்ஸ் அப் மூலமாக தகவல் அறிவிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் அந்த தகவல்கள் முறையான தொடர்பாடலின் கீழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறினார். whatsapp என்பது ஓய்வு நேரத்தில் பயன்படுத்தப்படும் ஊடகமாக இருக்கின்ற நிலையில் இவ்வாறான மிக முக்கியமான தகவல்களை அதன் மூலமாக அனுப்புவது எந்த அளவு பயனுள்ளதாக அமையும் எனவும் அந்த தகவல்கள் வாட்ஸ் அப்பில் படிக்கப்படும் போது தாக்குதல்கள் நடத்தப்பட்டுு உயிர்ச் சேதங்கள் சொத்து சேதங்கள் இடம்பெற்றதன் பின்னர் சந்தேக நபர்கள் இருவரும்்் அது குறித்து கவனம் செலுத்தியதாக தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சருக்கு உள்ள அதிகாரம் பாதுகாப்பு செயலாளருக்கு இல்லை…
————————————–
பாதுகாப்பு படை மற்றும் புலனாய்வுப் பிரிவு தொடர்பில் செயல்படும்போது பாதுகாப்பு அமைச்சருக்கு உள்ள அதிகாரங்கள் பாதுகாப்பு செயலாளருக்கு கிடையாது என தெரிவித்த நீதவான் லங்கா ஜெயரத்ன சிலரது கவனயீனமான செயற்பாடுகளை இந்த இருவர் மீதும் சுமத்த முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹேமசிரி மற்றும் பூஜித்த 100% நிரபராதிகள் இல்லை ஆயினும்…
————————————–
இறுதியில் நீதவான் முக்கியமான கருத்து ஒன்றை வெளியிட்டார். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் கிடைத்தமை மற்றும் அதனை தடுப்பதற்கு சந்தேக நபர்கள் இருவரும் நூற்றுக்கு நூறு வீதம் சரியான நடவடிக்கைகளை எடுத்ததாக தெரியவரவில்லை எனினும் அவர்களது கவனயீனம் காரணமாக கொலைகள் இடம்பெற்றதை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதால் அவர்களை பிணையில் விடுதலை செய்வதாக பிரதான நீதவான் அறிவித்தார்.

சந்தேகநபர்கள் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பிய பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு சென்று வாக்குமூலம் அளிக்குமாறு உத்தரவிட்ட நீதவான் வழக்கு விசாரணையை எதிர்வரும் 22ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

பிரதான நீதவானின் இந்த தீர்ப்பினால் ஆடை இழந்த சட்டமா அதிபர் தனது நெருங்கிய நண்பியான நிசாரா ஜெயரதனவின் ஊடாக சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கியமைக்கு எதிராக மேன்முறையீடு செய்ய இருப்பதாக அறிவித்தார்.

கமராலா – தப்புல இணைந்து தாக்கல் செய்த விரிவான அறிக்கையின் ‘ஜாதகம்..’
————————————–
ஒன்பதாம் திகதி செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி கமராலா பிரித்தானியா நோக்கி தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் அதற்கு முந்தைய நாளான எட்டாம் திகதி திங்கட்கிழமை பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவிற்கு தன்னை சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். பூஜித்த மற்றும் ஹேமஸ்ரீ தொடர்பான வழக்கு தொடர்பில் உரையாடவே அந்த அழைப்பு விடுக்கப்பட்டது. ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று சந்தன விக்கிரமரத்தின குற்றப் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் மற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவருடன் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றிருந்தார். குறிப்பிட்ட நேரத்திற்கு இவர்கள் சென்றிருந்தபோதும் சுமார் 40 நிமிடங்கள் ஜனாதிபதியை சந்திக்க வாய்ப்பு கிடைக்காது காய்ந்து கிடந்தனர். அப்போது சட்டமா அதிபர் தப்புல லிவேரா தனது ‘கீப்’ நெருங்கிய நண்பியுடன் அங்கு சென்றிருந்தார்.

கமராலா பிரதம நீதியரசரை தொலைபேசியில் அழைத்தார்…
————————————–
அனைவரும் வந்ததன் பின்னர் ஜனாதிபதி பதில் பொலிஸ்மா அதிபர் சட்டமா அதிபர் உள்ளிட்ட குழுவினருடன் கலந்துரையாடலை ஆரம்பித்தார். அப்போது பூஜித்த மற்றும் ஹேமஸ்ரீ ஆகிய இருவரும் ஒருபோதும் பிணையில் வெளியில் வரக்கூடாது என்று மைத்திரிபால தெரிவித்தார். அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம நீதியரசரை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

பூஜித்த மற்றும் ஹேமஸ்ரீ ஆகியோருக்கு எக்காரணத்தைக் கொண்டும் பிணை வழங்கக் கூடாது எனவும் அது குறித்து பேசுவதற்கு பதில் பொலிஸ் மா அதிபர், சட்ட மா அதிபர் ஆகியோர் தற்போது தன்னுடன் இருப்பதாகவும் பிரதம நீதியரசரும் இது தொடர்பில் தனது தேவைக்கேற்ப செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். பிரதம நீதியரசர் ஜனாதிபதியின் கருத்தை கேட்டு அமைதியாக இருந்துவிட்டார்.

ஊடகவியலாளரை கடத்திய புலனாய்வு அதிகாரியை கைது செய்தது ஏன் என கமலா திட்டினார்..
————————————–
அதன் பின்னர் முன்னாள் திவயின பிரதம ஆசிரியர் உப்பாலி தென்னக்கோன் தாக்கப்பட்டமை கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை மற்றும் பிரகீத் எக்னெலிகொட காணாமல் செய்யப்பட்டமை தொடர்பில் கோட்டாபயவின் இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரியான ‘லலித் ராஜபக்ச’ என்பவரை கைது செய்தமை தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு பணிப்பாளர் ஆகியோரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுமையாக திட்டியுள்ளார். இந்த பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு சட்டமா அதிபரிடம் பொறுப்பு வழங்கினார்.

“நான் உங்களுக்கு கூறியிருக்கிறேன் எந்த ஒரு காரணத்துக்காகவும் இராணுவத்தினரை கைது செய்ய வேண்டாம் என்று. ஏன் இந்த நபரை நீங்கள் கைது செய்தீர்கள்?” என்று மைத்திரிபால சிறிசேன போலீசாரை நோக்கி கடும் தொனியில் கேள்வி எழுப்பினார்.

இறுதியில் பூஜித்த மற்றும் ஹேமசிரி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ‘விரிவான விசாரணை’ அறிக்கையை சட்டமா அதிபர் தப்புத் லிவேராவே தயாரித்து கொண்டு வந்திருந்தார். தப்புலவின் ‘கீப்’ நெருங்கிய நண்பி அந்த ஆவணத்தை வெளியில் எடுத்தார். அதில் ஜனாதிபதி அலுவலகத்திலேயே பிரதிகள் பெற்று பொலிஸாருக்கு வழங்கியதுடன் போலீசாரின் விரிவான விசாரணை என்ற ஆவணத்திற்கு இதனை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கோரியிருந்தார்.

அதன்படி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ‘விரிவான விசாரணை’ அறிக்கை அதுவாகும். எனினும் கொழும்பு பிரதான நீதவான் குறித்த அறிக்கையை குப்பையில் வீசும் படியாக சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கி தீர்ப்பளித்தார்.

மிதக்கும் படகை விரைவில் மூழ்கடித்தனர்…
————————————–
இங்கு வெளிப்படும் உண்மை என்னவென்றால் மைத்திரிபால சிறிசேன தொலைபேசி மூலம் பிரதம நீதியரசருக்கு தனது தேவைக்கேற்ப செயல்படுமாறு கூறிய போதும் அதற்கு மாறாக செயற்பட்ட பிரதம நீதியரசர் கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜெயரத்னவிற்கு சட்டத்தை முறையாக அமல்படுத்துமாறு வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் பிரதம நீதவான் தனது செயற்பாட்டை முன்னெடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் லங்கா ஈநியூஸ் நீதிமன்றம் செய்தியாளரிடம் அபூர்வமான கருத்தொன்றை கூறினார்…,

“எனக்கு தெரிந்த மட்டில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மூழ்கப்போகும் படகில் ஏறி உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு முட்டாள் அல்ல. முடிந்தால் அவர் மூழ்கப்போகும் படகில் உள்ள நபர்களை காப்பாற்றிவிட்டு படகை விரைவில் மூழ்கடிக்கச் செய்வார்.”

சந்திரபிரதீப்

Web Design by The Design Lanka