எழுத்தாளர் உபாலி லீலாரத்ன காலமானார் » Sri Lanka Muslim

எழுத்தாளர் உபாலி லீலாரத்ன காலமானார்

IMG_20190712_080802

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Jawad maraikar


இலங்கையில் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்காகப் பெரும் பங்காற்றிய எழுத்தாளர் உபாலி லீலாரத்ன ( Upali Leelaratne ) காலமான துயரச் செய்தியை நண்பர் மேமன்கவி பதிவு செய்துள்ளார்.

இவர் , நாற்பதுக்கு மேற்பட்ட தமிழ்ச் சிறுகதைத் தொகுதிகளையும் நாவல்களையும் சிங்களத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார் ( ஜெயகாந்தன் , கு. சின்னப்பபாரதி முதலான தமிழக எழுத்தாளர்களின் நூல்களும் இவற்றுள் அடங்கும் ). சிறுகதைத் தொகுதிகள் , நாவல்கள் தவிர பூலான்தேவி , உமர் முக்தார் போன்ற நூல்களும் இவரால் சிங்களத்துக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இவரின் மறைவு தமிழ் – சிங்கள இலக்கியப் பரிமாற்றத்தில் ஒரு தேக்கநிலையை ஏற்படுத்துமென்பது திண்ணம்.

உபாலி லீலாரத்ன அவர்களின் இழப்பால் துயருறும் அனைவருடன் நானும் இணைகின்றேன் .

Web Design by The Design Lanka