உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - இழப்பீடு 262 மில்லியன் ரூபா » Sri Lanka Muslim

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – இழப்பீடு 262 மில்லியன் ரூபா

IMG_20190712_082335

Contributors
author image

Editorial Team

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் போது உயிரிழந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கும் செயற்பாடுகள் தொடர்பில் தற்போதைய நிலை குறித்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

 இதற்கு பொறுப்பு வகிக்கும் முழுமையாக சேதமடைந்தவற்றுக்கு இழப்பீடு வழங்கும் அலுவலகத்தில் பெறப்பட்ட தரவுகள் பின்வருமாறு;

இந்த தாக்குதலின் ஊயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 263 ஆகும். இவர்களுள் இதுவரையில் 201 நபருக்கே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக சமகால அரசாங்கம் 198 525 000 ரூபாவை (198 மில்லியன்) ஒதுக்கீடு செய்துள்ளது. காயமடைந்தவர்களான 500 பேரில் 438 பேருக்கே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக அரசாங்கம் 64 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது. இது வரையில் இந்த இழப்பீடுகளுக்காக 262 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை இவ் தாக்குதலினால் சேதமடைந்த தேவாலயங்களை புனரமைப்பதற்காக தேசிய கொள்கை மீள் குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி இளைஞர் அலுவல்கள் அமைச்சினால் 25 மில்லியன் ரூபா இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை கடற்படையினருக்கே முற்பணமாக வழங்கப்பட்டுள்ளது.

கட்டுவபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்துக்கு 10 மில்லியன் ரூபாவும் மட்டக்களப்பு சியோன் தேவாவலயத்துக்கு 5 மில்லியன் ரூபாவும் பொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு 10 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டது.

அரசாங்க தகவல் திணைக்களம்

Web Design by The Design Lanka