சித்திலெப்பை ஆய்வுப் பேரவை முதலாவது தேசிய ஆய்வு மாநாடு 2018 » Sri Lanka Muslim

சித்திலெப்பை ஆய்வுப் பேரவை முதலாவது தேசிய ஆய்வு மாநாடு 2018

sid5

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

சித்திலெப்பை ஆய்வுப் பேரவை முதலாவது தேசிய ஆய்வு மாநாடு 2018 வெள்ளவத்தை சோனக இஸ்லாமிய கலாச்சார நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை(22) முழுநாளும் நடைபெற்றது காலை அமா்வில் ” அருள் வாக்கி அப்துல் காதிா் புரவா் அரங்கில்” இலங்கை முஸ்லிம் தேசியத்தின் தந்தை அறிஞா் சித்திலெப்பை” எனும் தலைப்பில் பேராசிரியா் எம். எஸ்.எம். அனஸ், தலைமையில் நடைபெற்றது .
அறிஞா் அசீஸ் அரங்கில் ” நவகாலனித்துவ யுகத்தில் இலங்கை முஸ்லிம்கள் எதிாகொள்ளும் சவலால்கள்” எனும் தலைப்பில் பேராசிரியா் சோ சந்திரசேகரன், கலாநிதி பி ஏ ஹூ்சைமியா ஆகியோா் தலைமை வகித்தனா்.

பிற்பகல் நிகழ்வின்போது சித்திலெப்பை ஆய்வு மன்றத்தின் தலைவா் சட்டத்தரணி மசூம் மௌலானா, டாக்டா் அகமது ரிஷி, பேராசிரியா் எம். ஏ நுஹ்மான், பேராசிரியா் சேமு முகமதலி, பேராசிரியா் தீன் முஹம்மத், சிரேஸ்ட ஆங்கில ஊடகவியலாளா் லத்தீப் பாருக் , காப்பியக்கோ ஜின்னாஹ் சரிபுத்தீன், நியாஸ் ஏ சமத், சட்டத்தரணி பைசால் ஆகியோறும் உரையாற்றினாா்கள்.

இந் நிகழ்வின்போது ‘முஸ்லிம் நேசன்’ சிறப்பு மலர் முதற்பிரதியை இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக் கொண்டாா், சித்திலெப்பை வாழ் நாள் சாதனையாளா்களாக சிரேஸ்ட ஊடகவியலாளா் லத்தீப் பாருக், புரவலா் ஹாசீம் உமா் (இலக்கிய பங்களிப்பு), டாக்டா் ஞானசேகரன் (ஞானம் ஆசிரியா்) ஆகியோா்கள் விழாவின் போது பேராசிரியா்களினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.

அத்துடன் சித்திலெப்பை ஆய்வு மன்றம் நடாத்திய தேசிய ஆய்வுக் கட்டுரைப் போட்டியில் முதலாமிடம் ஜனாபா ஜெஸீமா ஹமீத், இரண்டாம் இடம் திரு.பாஸ்கரன் சுமன், முன்றாமிடம் டொக்டா் அசாத் எம் ஹனிபா ஆகியோா் பெற்றுக் கொண்டனா். மாநாட்டின் தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

sid11

4 (2)

4 (2)

sid4

sid5

Web Design by The Design Lanka