மனு விசாரணை ஜூலை 25 வரை ஒத்திவைப்பு » Sri Lanka Muslim

மனு விசாரணை ஜூலை 25 வரை ஒத்திவைப்பு

poojitha

Contributors
author image

Editorial Team

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக வழக்கு 7 நீதியரசர்கள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையில் புவனேக அலுவிகார, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, எல் டீ பீ தெஹிதெனிய மற்றும் முருது பெர்ணான்டோ ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் மனு அழைக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமைக்கு எதிராக 11 பேர் இணைந்து இந்த உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், குறித்த வழக்கு ஜூலை 25 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Web Design by The Design Lanka