இப்படி ஓர் சிந்தனாவதியாக பெரும் மனிதனாக வருவார் என நினைத்திருந்தோமா? » Sri Lanka Muslim

இப்படி ஓர் சிந்தனாவதியாக பெரும் மனிதனாக வருவார் என நினைத்திருந்தோமா?

segu

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Prof. Maunaguru sinnaiah


இப்படியும் ஒரு காலம் நிலவியது-.கதை— 6
ராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாராக நடித்த முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் (எல்லா இனத்துப் பேரப் பிள்ளைகளுக்கும் ஒரு பாட்டன் சொல்லும் பழம் கதைகள்)
———————————————————————————-
1957 அல்லது 1958 என நினைக்கிறேன்,எனக்கு அப்போது 15 வயது நான் வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் படித்தகாலம், நான் அன்றைய எஸ். எஸ்.ஸி எனப்படும் 10 ஆம் வகுப்பு மாணவன்.
அதிலும் விடுதி மாண்வன்.

அந்த விடுதி பற்றி ஏற்கனவே எழுதியுமுள்ளேன்

.விடுதியில் ஏராளமான இஸ்லாமிய மாண்வர்கள் தங்கிப்படித்தனர்

இவர்கள் ,கிழக்கு மாகாணத்தின் பலதிசைகளிலுமிருந்து வந்தவர்கள்.

விடுதியில் ஒன்றாக இருக்கையில் அனைவரும் போட்டிக்குப் பாட்டுப்பாடுவோம்.நடனமாடுவோம் பேச்சுப் பேசுவோம்
கதைகள் சொல்வோம்
,விளையாடுவோம்
ஒரே கும்மாள்ம்

தமிழர் இஸ்லாமியர் என்ற இனபேத நஞ்சுகள் ஊட்டப்படாத பிஞ்சு வயது

நாடகம் போடுவதும் அச்செயற்பாடுகளில் ஒன்று

நான் எப்போதும் பிரதான நடிகனாகிவிடுவேன்

,எப்படி அது வந்தது என்று எனக்குத் தெரியாது.

மாண்வ்ர்கள் அனைவரும் இணைந்தும் நாடகம் போடுவோம்

அல்லது பரிசளிப்பு விழாவுக்கு ஆசிரியர்கள் பழக்கும் நாடகங்களிலும் நடிப்போம்

ஒரு நாள் எங்கள் சங்கீத ஆசிரியர் தேவசகாயம் எம்மிற்சிலரை அழைத்து நமது பாடசாலை வாசிகசாலை நிதிக்காக ஒரு நாடகம் போடுவோம் என்றார்

நாடகம் என்ன என்பதில் ஒரு உரையாடல் நடந்தது

அப்போது நம்மிற் சிலர் நன்றாக வாசிப்பவர்களாக இருந்தோம்.

அச்சமயம் நான்
அரு இராமநாதனின்
இராஜ ராஜ சோழன் நாடகம் வாசித்துக்கொண்டிருந்தேன்

தேவசகாயம் சேரிடம் அந்நாடகம் பற்றிக் கூறினேன்,

அந்நாடக நூல் எமது பள்ளிக்கூட வாசிகசாலையில் இருந்த து

அன்று எம் பாடசாலையில் வாசிப்பிற்கென ஓர் பாடவேளை ஒதுக்கியிருந்தார்கள்

அப்பாடவேளையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மாண்வர்களை அழைத்துக்கொண்டு பாடசாலையிலிருந்த வாசிக சாலைக்குச் செல்ல வேண்டும்

.மாண்வர்கள் அவசியம் வாசிக்கவும் வேண்டும்.

அப்படி வாசித்தபோது எமக்குக் கிடைத்த நூல்தான் இந்த ராஜராஜ சோழன் நாடகம்

டி கே எஸ் சகோதர ர்கள் அன்று ஓர் நாடக் கம்பனி வைத்திருந்தனர்,

சரிதிர நாடகம் ஒன்று போட அவர்கள் விரும்பி எழுத்தாளர்களுக்கிடையில் ஒரு போட்டி வைத்தபோது அரு.ராமநாதன் எழுதிய இந்நாடகம் தான் முதற்பரிசு பெற்றது

,இதனை டி,கே எஸ் சகோத ர ர்கள் மேடை நாடகமாக நடித்தனர்
அவர்களுக்கு இது பெரும் புகழ் தந்தது

இதனைத்தான் பின்னர் திரைப்படமாக்கினர்

ராஜராஜ சோழனாக சிவாஜி கணேசன்
நடித்திருந்தார்

நாம் அந்த நாடகத்தை நடிக்க விரும்பினோம்.

அந்நாடகம் படித்திருந்த மாண்வர்களுள்

சேகு இஸ்ஸதீனும் ஒருவன்,

அக்கரைப்பற்றிலிருந்து வந்து விடுதியில் இருந்து வந்த அப்பையன் வெகு அழகான பையன்,

சிவந்த நிறம்
பரந்த முகம்,
புன் முறுவல் தவழும் வதனம்,
எப்போதும் வாசிக்கும் பையன்
குழப்படி கிடையாது.

அவன் விடுதியில் அனைவரையும் கவர்ந்திருந்தான்

என்னை விட இரு வயது இளையவன்

எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான்.

என்னோடு மிக நெருக்கம்,
நான் சீனியர் டொமற்றிப் பிறிபெக்ட் வேறு

இராஜ ராஜ சோழன் நாடகத்திற்குப் பாத்திரத் தெரிவு நடை பெற்றுக் கொண்டிருந்தது.

இராஜராஜ சோழனுக்கு
மூதூர் சிவராஜா தெரிவானார்,

அவர் மிக உயரமான மாண்வர்

. கம்பீரனான தோற்றம்

ராஜராஜ சோழனை எதிர்த்துப்பேசும் புரட்சிக்காரனான விமலாதித்தனாக நான் தெரிவானேன்

ரஜராஜன் மகள் குந்தவிக்கு
ஒரு ஆள் தேவைப்பட் ட து..

இப்போதையப்போல அல்ல அன்று ஆண்களும் பெண்களும் சேர்ந்து நடிக்கும் வழக்கம் இல்லை எனவே குந்தவைக்கு ஒரு அழகான ஆண் தேவைப்பட் ட து

இஸ்ஸதீன் தெரிவானார்.

நாடக ஒத்திகைகள் ஆரம்பமாகின

மாண்வர்களான நாங்களே ஒத்திகைகளை அதிகம் பார்த்துக்கொள்வோம்

அதிகமானோர் விடுதி மாண்வர்களானதால் விடுதியில் இரவு இரண்டாம் படிப்பு நேரமான 8.30 தொடக்கம் 9,30 வரையான நேரத்தை விடுதி ஆசிரியரான தேவசகாயம் சேர் எமக்கு நாடகம் பழக ஒதுக்கித் தந்தார்,

இன்றைய கிழக்குப்பல்கலைக்க்ழக நல்லையாமண்டபம்தான் நாம் அன்று நாடகம் பழகிய ஹால்

தினமும் நாடகம் பழகினோம்

சேரும் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்

விமலாதித்தன் ராஜராஜ சோழனின் எல்லைப்புற நாடான வேங்கி நாட்டு அரசனின் தம்பி,துடிப்பும் வீரமும் சுதந்திர எண்ணமும் கொண்ட இளைஞன் அவன்.

அவன் மீது காதல் கொள்கிறாள் குந்தவி நாச்சியார். இள்ம் வயதுக்காதல்.

எனினும் கப்பம் கட்ட மறுத்தமைக்காக விமலாதித்தனைச் சிறையில் அடைக்கிறான் ராஜராஜ சோழன்,

ஒரு நாள் ரஜ ராஜசோழன் பிறந்த நாளன்று கைதிகள் விடுவிக்கப்பட்டபோது விமலாதித்தனும் விடுவிக்கப்படுகிறான்,

பின்னர் கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று குந்தவி நாச்சியாரைபரிசாக் கேட்க ரஜ ராஜனும் தன் மகளைப் பரிசளிக்கிறான்

நாங்கள் இந்த நாடகம் நடித்து14 வருடங்களுகுப் பின்தான் ராஜராஜ சோழன் படம் வெளியானது,

அதில் விமலாத்தித்தனுக்கு முத்துராமனும்
குந்தவி நாச்சியாருக்கு லக்சுமியும் நடித்திருந்தார்கள்

துடுக்குத் தனமும் வாயாடித்தனமும் அஞ்சாமையும் நிறைந்த ஓர் இளம் பெண் இந்தக் குந்தவி நாச்சியார்

. அந்தப்பாத்திரத்தை ஏற்றிருந்தார் நண்பர் இஸ்ஸதீன்

இருவரும் தனியாகவும் ஒத்திகை பார்ப்போம்

இருவரும் திட்டமிட்டு ஒரு காதல் காட்சியையும் அதில் சேர்த்துக்கொண்டோம் ,

அன்று வெளிவந்த ஏதோ ஒரு சினிமாப்பாடலிற்கு இருவரும் ஆடிப்பாடிக் காதல் செய்வதாக ஒரு காட்சியை ஒத்திகை செய்தோம்

நான் கை நீட்டிப்பாட இஸதீன் அன்றைய சினிமாக் கதாநாயகிகள்போல நெளிய என அதனை அமைத்தோம்

அதனை நாம் செய்து காட்டிய போது அக்காட்சியை தேவசகாயம சேர் வேண்டாம் என்று விட்டார்

நாம் மாண்வரகள் அல்லவா?

காதல் பாட்டை அவர் விரும்பவில்லை

. பாடலை நீக்கினலும் அதில் வரும் காதல் வசனங்களை அவர் நீக்கவில்லை

நாங்கள் காதல் வசங்னகள் பேசி நடித்தோம்

இரஜ ராஜ சோழன் நாடகம் மேடையேறியது

நானும் இஸதீனும் ஏனைய மாண்வர்களும் வேடமிட்டு ஒப்பனை செய்து உருமாறி மேடையில் தோன்றினோம்

இஸதீனுக்கு பெண் வேடம் மிகபொருத்தமக இருந்தது.

அழகான அந்தப்பையன் அழகான பெண்ணாகத் தோன்றினான்

சாரிகட்டி
ஆபரண்ம் அணிந்து
முடிவைத்து
அவன் மிக மிக அழகான பெண்ணாகத்தோன்றி ஆண்கள பெண்கள் அனைவரின் உள்ளங்களையும் பெண் தோற்றத்தாலும் தனது நளினமான பெண் நடிப்பாலும் அப்படியே கொள்ளை கொண்டு விட்டான்.,

குந்தவை நாச்சியார் என்ற பெண் பாத்திரம் அவருக்கு பெரும் புகழ் தந்த து

குந்தவி என்றுகூடச் சிலகாலம் சிலர் அவனை அழைத்தனர்

அது ஒரு காலம்

இஸ்லாமிய மாண்வர்களும் தமிழ் மாண்வர்களும் மிக நெருக்கமாக ஒரு குடும்ப பிள்ளைகள் போல இருந்த காலம்,

இனபேத எண்ணங்கள் இல்லாது நாம் வள்ர்த்தெடுக்கப்பட்ட காலம்

பின்னாளில் இந்த இஸ்ஸ்தீன் வேதாந்தி என்ற பெயரில் எழுத்தாளனாகி

.எழுத்து உறவினால் கவிதா எனும் ஓர் தமிழ் எழுத்தாளியை மண்ந்து

அதன் பின் காலப்போக்கில் முஸ்லிம் காங்கிரஸை காலம் சென்ற தலைவர் அஸ்ரப்புடன் இணைந்து உருவாக்கி

இலங்கை அரசாங்கத்தில் ஓர் அமைச்சருமானார்

அப்போது என்களின் தம்பிபோல இருந்த அம்மாணவன்

இப்படி ஓர்
சிந்தனாவதியாக
பெரும் மனிதனாக வருவான் என நினைத்திருந்தோமா?

காலம் எத்தனை காரியங்களை ஆற்றிச் செல்கிறது.

Web Design by The Design Lanka