பஷீர்சேகுதாவூத், ஹஸனலி வரிசையில் அடுத்தது ஹரீஸ் » Sri Lanka Muslim

பஷீர்சேகுதாவூத், ஹஸனலி வரிசையில் அடுத்தது ஹரீஸ்

Harees & Rauff

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Ashraff ahamed


கரையோர மாவட்டம் பெற்றுத்தருவோம் என்றவர்களின் கையாலாகாத்தனம், கேவலம் தங்கள் முகவெத்திலையாம் கல்முனையைக் கூட காப்பாற்ற முடியாத நிலை.

சாய்ந்தமருதுக்கு விட்டுக்கொடுத்தால் அதில் பாதிப்புண்டாம் என்று பொய்ச்சாட்டு சொன்னவர்கள், இன்று அதனை தமிழர்களுக்குத் தாரைவார்த்துக் கொடுத்திருக்கின்றனர்.

நாங்கள் கொண்டுவந்த ஆட்சி என்று மார்தட்டியவர்கள், இன்று அவர்கள் கொண்டுவந்த அந்த ஆட்சிக்கு முன்னால் கூனிக்குறுகிப் போய் நிற்கும் நிலை.

பதவி விலகல் என்ற நாடகத்தின் மூலம் மக்கள் மனங்களை வென்ற துர்ப்பாக்கியம் கொண்டவர்கள், எதற்காக பதவி விலகினோம் என்று தெளிவுபடுத்தும் முன்னமே மீண்டும் கேவலம் அதே அரசோடு ஒட்டி உறவாடும் நிலை.

நாங்கள் அமைச்சுக்களும் அதிசொகுசுகளும் இல்லாமல் இருக்கமாட்டோம் என்பதை அழகாக நிரூபித்துக்காட்டி இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி நாடுகடந்த தமிழர்களும், தமிழ்கூட்டமைப்பும்தான் எங்களை வழிநடாத்துகிறார்கள் என்பதையும் தங்கள் வாய்களாலேயே உறுதிப்படுத்தி இருக்கின்றனர்.

இன்னும் இன்னும் இந்த கட்சிகளையும், தலைமைகளையும் நம்பி, அவர்களின் பின்னால் சென்று, அவர்களுக்கு வாக்களிக்கும் மடைமையுள்ள கூட்டம் இருக்கும் வரை, கல்முனை என்ன எங்கள் கச்சையையும் இழக்கவேண்டி வரும் என்பதை மறவாதீர்கள்.

கல்முனை மட்டுமல்ல, அடுத்த தேர்தலில் கல்முனையின் பிரதிநிதி ஹரீஸ் அவர்களைக் கூட திட்டமிட்டு வெளியேற்றுவார்கள். அது தேர்தல் தோல்வியாகவே அமையும், இதனை இன்றைக்கு நீங்கள் ஏற்றுக்கொள்ளாமல் விடலாம், ஆனால் பஷீர்சேகுதாவூத், ஹஸனலி வரிசையில் அடுத்தது ஹரீஸ் அவர்கள்தான், அதற்கான அரங்கேற்றங்கள் ஏலவே நடைபெறத்தொடங்கி விட்டன…

Web Design by The Design Lanka