ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் இன்று இலங்கை வருகிறார் » Sri Lanka Muslim

ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் இன்று இலங்கை வருகிறார்

IMG_20190718_131446

Contributors
author image

Editorial Team

அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் கிளெமென்ற் நயாலெட்சோசி வூல் 9 நாள் பயணத்தை மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வரவுள்ளார்.

அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காகவே அவர் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் எதிர்வரும் 26ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் இவர், கொழும்பிலும், வடக்கு, கிழக்கு மற்றும் தென்பகுதிகளுக்கும் அவர் பயணங்களை மேற்கொண்டு, மதிப்பீடுகளை மேற்கொள்ளவுள்ளார்.

அரச உயர்மட்ட அதிகாரிகளையும், நீதித்துறை, ஊடகத்துறை, சிவில் சமூக குழுக்களையும், மனித உரிமை ஆணைக்குழுவையும் அவர் சந்தித்துப் பேசவுள்ளார்.

Web Design by The Design Lanka