ஷோபா உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை – பிரதமர் சட்டத்தரணிகள் சங்கத்திடம் தெரிவிப்பு » Sri Lanka Muslim

ஷோபா உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை – பிரதமர் சட்டத்தரணிகள் சங்கத்திடம் தெரிவிப்பு

IMG_20190718_182859

Contributors
author image

Editorial Team

அரசாங்கம் அமெரிக்காவுடன் ஷோபா உடன்படிக்கையை கைச்சாத்திடவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற இலங்கை சட்டத்தரணிகளின் சங்கத்தின் உயர்நிலை பிரதிநிதிகளின் சந்திப்பின் போது பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். ஷோபா உடன்படிக்கை மிலேனியம் சலேஞ்ச் கோப்ரேஷன் உடன்படிக்கை மற்றும் காணி விஷேட ஒழுங்கு விதிகள் திருத்த சட்ட மூலம் தொடர்பாக ஏற்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் சிலர் பிரதமரை நேற்று சந்தித்தனர்.thumbnail 1

இதற்கு முன்னர் சட்டத்தரணிகளின் சங்கத்தின் பிரதிநிதிகள் சிலர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக்மாறப்பன எதிர்கட்சி தலைவர் ஆகியோர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தனர்.  பேச்சுவார்த்தைக்கு பின்னர் இது தொடர்பாக பிரதமர் கருத்து தெரிவித்தார்.thumbnail 2

இலங்கை சட்டத்தரணிகள் சங்க பிரதிநிதிகளுடன் வெற்றிகரமான பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஷோபா உடன்படிக்கை மிலேனியம் கோப்ரேசன் உடன்படிக்கை மற்றும் காணி விஷேட ஒழுங்கு விதிகள் திருத்த சட்ட மூலம் ஆகியன தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இதன் போது ஷோபா உடன்படிக்கையில் நாம் கைச்சாத்திடவில்லை என பிரதமர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

Web Design by The Design Lanka