நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகளில் ஒருவர் உயிரிழப்பு » Sri Lanka Muslim

நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகளில் ஒருவர் உயிரிழப்பு

die6

Contributors
author image

Editorial Team

அக்கரபத்தனை பிரதேசத்தில் நேற்று (18)  பெய்த கடும் மழைக்காரணமாக, நீரில் அடித்துச் செல்லப்பட்ட பாடசாலை மாணவிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், காணாமல் போன மற்றுமொரு மாணவியை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டொரின்டன் தோட்டத்திலிருந்து கொத்மலைஓயாவுக்கு நீரைக் காவிச் செல்லும் கால்வாய் ஒன்றுக்கு  அருகிலுள்ள தமது வீட்டுக்குச் செல்ல முயன்ற மாணவன் மற்றும் மாணவிகள் இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதன்போது, மாணவன் உயிர் தப்பியுள்ளதுடன், மாணவிகள் இருவர் காணாமல் போயிருந்தனர். இந்த நிலையில் அதில் ஒரு மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அக்கரபத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

12 வயதுடைய இரண்டு மாணவிகளே இவ்வாறு நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். TM

Web Design by The Design Lanka