பெட்டிக்லோ கெம்பஸ்; நடவடிக்கை முஸ்லிம் மக்களை இலக்காக கொண்டதல்ல » Sri Lanka Muslim

பெட்டிக்லோ கெம்பஸ்; நடவடிக்கை முஸ்லிம் மக்களை இலக்காக கொண்டதல்ல

IMG_20190719_211820

Contributors
author image

Editorial Team

பெட்டிக்லோ கெம்பஸ் பிரைவட் லிமிட்டட் தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை முஸ்லிம் மக்களை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்படும் தாக்குதல் அல்ல.

நாட்டில் உள்ள சட்ட விதிகளுக்கு அப்பால் அரசியல் ரீதியில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம் என்று பாராளுமன்ற உறுப்பினரும் பெட்டிக்லோ கெம்பஸ் தொடர்பாக பாராளுமன்றத்தினால் நியமிக்கப்பட்டுள்ள மதிப்பீட்டு பாராளுமன்ற குழுவின் அங்கத்தவரான பேராசிரியர் ஆசு மாறசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் துறை கண்காணிப்பு பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறி;க்கை அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அதனை அமைச்சரவையின் துணைக்குழுவிற்கு சமர்ப்பித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த அறிக்கை கிடைக்கவுள்ளது என்றும் சம்பந்தப்பட்ட அறிக்கையில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் ஒன்றை நடத்துவதற்கு சபாநாயகரிடம் கோரப்பட இருப்பதாகவும் பேராசிரியர் தெரிவித்தார்.

சமூகத்தில் அரசியல் வாதிகள் தொடர்பில் நிலவும் தவறான சிந்தனை நிலவுகின்றது இருப்பினும் சரியான அரசியல் கலாச்சாரத்திற்கு முன்மாதிரியை பெற்றுக்கொடுத்து பொதுவான வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களும் இருக்கின்றனர். இவ்வறானவர்களை தவறான வழியில் இட்டுச் செல்லும் அரசியல் வாதிகளும் இருக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு கண்டி பிரதான வீதியில் கலகெடிஹேன என்ற இடத்தில் முக்கியஸ்தர்களின் பாதுகாப்பு வாகனங்கள் இரண்டு மீது குண்டர்கள் சிலர் மேற்கொண்ட தாக்குதல் குறித்து தாம் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டதுடன் இந்த தாக்குதலை மேற்கொண்டவர்களை உடனடியாக கைது செய்து விசாரணை நடத்தி தண்டனை வழங்குவது தொடர்பிலும் இந்த முறைப்பாட்டில் குறிப்பிட்டிருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

அரசாங்கத் தகவல் திணைக்களம்

Web Design by The Design Lanka