அனர்த்த சிவப்பு எச்சரிக்கை » Sri Lanka Muslim

அனர்த்த சிவப்பு எச்சரிக்கை

IMG_20190720_091406

Contributors
author image

Editorial Team

நாட்டில் தற்சமயம் நிலவும் சீரற்ற காலநிலையினால் பல மாவட்டங்களுக்குத் தொடர்ந்தும் பாதிப்பு இடம்பெற்றுவருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இரத்தினபுரி, நுவரெலியா, கண்டி, காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட அனர்த்த சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.
இரத்தினபுரி மாவட்டத்தின் நிலை தற்சமயம் சீராகக் காணப்பட்டாலும் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் இருப்பதாகவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று இரவு 9.00 மணி வரை இந்த சிவப்பு எச்சரிக்கை அமுலில் இருக்கும். அனர்த்த நிலைமைகள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கும், பொலிசாருக்கும் அறிவிக்க முடியும். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் 0112-45-45-76 அல்லது 0112-58-72-29 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்து பொதுமக்களுக்கு உரிய தகவல்களை வழங்குவதற்காக 20 பொலிஸ் நிர்வாகப் பிரிவுகளில் 149 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

GID

Web Design by The Design Lanka