சீரற்ற காலநிலை; 07 பேர் பலி » Sri Lanka Muslim

சீரற்ற காலநிலை; 07 பேர் பலி

FLOOD44

Contributors
author image

Editorial Team

சீரற்ற காலநிலை காரணமாக 8 மாவட்டங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அதேவேளை, பலத்த காற்று, மண்சரிவு மற்றும் வௌ்ளம் காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலையால் 8 வீடுகள் முழுமையாகவும், 703 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன எனவும் இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. .

இதேவேளை, இரத்தினபுரி, நுவரெலியா, கேகாலை, கண்டி, களுத்துறை, மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்து அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

இதனால் குறித்த மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Web Design by The Design Lanka