உங்கள் நேர்மையை ஒருக்கா மறுபரிசீலனை செய்து பாருங்கள் » Sri Lanka Muslim

உங்கள் நேர்மையை ஒருக்கா மறுபரிசீலனை செய்து பாருங்கள்

cv

Contributors
author image

Fauzer Mahroof

Fauzar mahroof


முன்னாள் நீதிபதியும் முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் , இன்னாள் தமிழ் மக்கள் கூட்டணி அரசியல் கட்சி தலைவருமான விக்னேஸ்வரன் அவர்கள் , இந்த குற்றச்சாட்டினை வெறுமனே மேடைப்பேச்சாக மட்டும் வைக்காமல், இந்த 300 கிராமங்களையும் தொகுத்து ஆவணமாக்கி ,தமிழ்கூறும் உலகின் முன் வைப்பாரானால் அவரது புலமைத்துவ, அரசியல் நேர்மைக்கு நாம் மதிப்பளிப்போம்.

மாறாக ஒன்றை பத்தாக்கி ,இனவாத தீயை வளர்ப்பதே நோக்கமெனில் நீங்கள் படித்த கல்வியையும் ,உங்கள் அறிவு நேர்மையையும் ஒருக்கா மறுபரிசீலனை செய்து பார்ப்பதை தவிர வேறு ஏதாவது வழி உள்ளதா?

கிழக்கில் பல தமிழ் ,முஸ்லிம் கிராமங்கள் அழிக்கப்பட்டுள்ளன .30 வருடத்திற்கு மேலான போர் சூழலும், இன முரண்பாட்டு நிலவரமும் இரு இனங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன.

இதை வாசிப்போர் உங்களுக்கு தெரிந்த இரு தரப்பாலும் அழிவுக்குள்ளான கிராமங்களை தரவு நிரற்படுத்துங்கள்…அழிக்கப்பட்டது,அழிவுக்குள்ளானது தமிழ் கிராமமா முஸ்லிம் கிராமமா ? என்பதையும் சொல்லுங்கள்!ஒரு நேர்மையான கணக்கெடுப்புக்கு நாம் வர வேண்டி இருக்கிறது.

Web Design by The Design Lanka