மு. கா உயர்பீட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்! » Sri Lanka Muslim

மு. கா உயர்பீட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்!

hakeem

Contributors
author image

Editorial Team

முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை அமைச்சு பொறுப்புக்களை ஏற்காதிருக்க முஸ்லிம் காங்கிரஸ் அதியுயர் பீட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.

முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு கூட்டம் ரவூப் ஹக்கீம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந்த கூட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம்,

நாடு பூராவுமுள்ள முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை, கிழக்கில் எமக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் தீர்த்துக் கொள்ள வேண்டிய பிரச்சினைகள் என்பன தொடர்பில் நிரந்தரமான தீர்வொன்று கிடைத்த பின்னரே அடுத்த கட்ட முடிவு எடுப்போம்.

தற்பொழுது முகங்கொடுத்து வரும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்க வேண்டும். அது தொடர்பில் அரசாங்கத்தை அறிவூட்டியுள்ளோம்.

கல்முனை போன்று வேறு சில பகுதிகள் குறித்தும் பிரச்சினை காணப்படுகிறது. அரசின் முடிவுகளுக்கு அமையவே எதிர்கால செயற்பாடுகள் எடுக்கப்படும்.

அமைச்சு பொறுப்புகளை ஏற்பது தொடர்பில் இன்னும் முடிவில்லை. அது கால தாமதமாகும். பிரதமருடன் சந்திப்பு இருக்கிறது. அதன்போது எமது முடிவை அறிவிக்க இருக்கிறோம்.

எமது பிரச்சினைகள் தொடர்பில் அரசு வழங்கும் முடிவிலே நாம் அமைச்சு பதவிகள் ஏற்பது தங்கியுள்ளது. 5 ஆம் திகதி ஐ.தே.க தலைமையில் ஆரம்பிக்கப்பட இருக்கும் புதிய கூட்டணியில் நாம் அங்கம் வகிப்பதா இல்லையா என்பதும் அரசின் பதிலிலே இருக்கிறது.

கூட்டணியில் இணைவது குறித்து கட்சிக்குள் ஆராயப்படவில்லை. அது தொடர்பில் நாம் மீண்டும் கூடி ஆராய இருக்கிறோம் என்றும் கூறினார்.

Web Design by The Design Lanka