தமிழ் தலைவர்கள் கல்முனை விவகாரத்தில் விட்டுக்கொடுக்கவும் » Sri Lanka Muslim

தமிழ் தலைவர்கள் கல்முனை விவகாரத்தில் விட்டுக்கொடுக்கவும்

Harees MP

Contributors
author image

Editorial Team

கல்முனை தமிழ் மக்களை சொந்த மக்கள் போன்று செயற்பட்டுவந்த மர்ஹூம் மன்சூருக்கு கெளரவம் செய்ய விரும்பினால் தமிழ் தலைவர்கள் கல்முனை விவகாரத்தில் விட்டுக்கொடுப்புடன் செயற்பட முன்வர வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சேனராஜா சமரநாயக்க, ஏ.ஆர்.மன்சூர் மற்றும் வீ.கே. இந்திக்க ஆகியோர் மீதான அனுதாப பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

மர்ஹூம் மன்சூர் கல்முனையில் தமிழ் பிரதேசங்களும் தங்கள் பிரதேசம் என நினைத்து அவிருத்திசெய்து வந்தார். ஆனால் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் கல்முனையில் தமிழ், பிரதேசம் என்றும் முஸ்லிம் பிரதேசம் என்றும் பிரியவேண்டும் என்று பிரசாரம் செய்வது மிகவும் கவலைக்குரிய விடயம்.

இந்த விடயத்தை கல்முனை அல்லாமல் வேறு பிரதேசமொன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் பேசியிருந்தால் அதனை ஏற்றுக்கொள்ள என்றும் இதன்போது கூறினார்.

Web Design by The Design Lanka