சஹ்­ரானும் அவ­ரது அமைப்பும் காத்­தான்­கு­டியில் அட்­ட­காசம் செய்­வ­தாக எமக்கு முறை­யி­டப்­பட்­டது » Sri Lanka Muslim

சஹ்­ரானும் அவ­ரது அமைப்பும் காத்­தான்­கு­டியில் அட்­ட­காசம் செய்­வ­தாக எமக்கு முறை­யி­டப்­பட்­டது

IMG_20190802_153956

Contributors
author image

Editorial Team

சஹ்ரான் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு காத்­தான்­கு­டியில் அட்­ட­காசம் செய்­கின்­றது என சஹ்லான் மௌலவி என்­பவர் 2017ஆம் ஆண்டில் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திற்கு முறைப்­பாடு ஒன்­றினை கொடுத்­த­வுடன் குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வுக்கும் முறைப்­பாடு செய்­துள்ளார்.

இரண்டு வரு­டங்­க­ளாக குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு நட­வ­டிக்கை எடுக்­கா­தது ஏன் என்ற கேள்­வியும் இது குறித்து நாம் பொலிஸ்மா அதி­ப­ருக்கு தெரி­வித்து அவர் நட­வ­டிக்கை எடுக்­கா­தது ஏன் என்ற கேள்­வியும் சட்­டமா அதிபர் திணைக்­களம் பக்கம் உள்­ளது என பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் சமல் திலிப பீரிஸ் பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளிக்­கையில் கூறினார்.

ஈஸ்டர் தாக்­குதல் குறித்து விசா­ரணை நடத்தி பாரா­ளு­மன்­றத்­திற்கு அறிக்கை சமர்ப்­பிக்க நிய­மிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு நேற்று வியா­ழக்­கி­ழமை பிற்­பகல் பாரா­ளு­மன்ற கட்­டி­டத்­தொ­கு­தியில் கூடி­யது. இதில் சாட்­சி­ய­ம­ளிக்க வந்­தி­ருந்­த­போதே அவர் இவற்றை குறிப்­பிட்டார்.

அவர் தெரி­வுக்­குழு முன் தொடர்ந்தும் கூறு­கையில், சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திற்கு அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்ள கடி­தத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு அனுப்பி வைக்­கப்­பட்ட கடிதம் ஒன்று குறித்து இந்த குழு முன்­னி­லையில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது. அதா­வது குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வி­னரால் கடந்த 2017ஆம் ஆண்டு கடிதம் ஒன்று அனுப்பி வைக்­கப்­பட்­டது.

இதில் குற்றம் சாதா­ரண சந்­தே­கத்­துக்கு அப்பால் உறு­திப்­ப­டுத்த முடிந்த ஆதா­ரங்­களை கொண்டே தீர்­மானம் எடுக்­கப்­படும். சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தில் குற்­ற­வியல் மற்றும் சிவில் வழக்­குகள் குறித்த பிரி­வுகள் உள்­ளன. இதில் போதைப்­பொருள் விவ­கா­ரங்கள் குறித்தும் சிறுவர் துஷ்­பி­ர­யோகம், பயங்­க­ர­வாத செயற்­பா­டுகள் குறித்து பிரி­வு­க­ளாக செயற்­படும் அதி­கா­ரிகள் உள்­ளனர். இதில் பயங்­க­ர­வாத கார­ணி­யொன்று வரு­மென்றால் அது ஆசாத் நவ­வியின் பிரி­வுக்கு செல்லும். இவை இறு­தி­யாக சட்­டமா அதி­ப­ருடன் கலந்­து­ரை­யாடி தீர்­மானம் எடுக்­கப்­படும். எம்.பி என்ற பிரிவு ஒன்று உள்­ளது. இது நேர­டி­யாக சட்­டமா அதி­பரின் கீழ் மக்­களின் குறை­களை ஆராயும் பிரி­வாகும். அவ்­வாறு இருக்­கையில் 2017 ஆம் ஆண்டு முஸ்லிம் அமைப்­பொன்று சட்­டமா அதி­ப­ருக்கு கோப்பு ஒன்­றினை அனுப்பி வைத்­துள்­ளது. சட்­டமா அதிபர் ஜெயந்த ஜெய­சூ­ரி­யவின் பெய­ருக்கே வந்­துள்­ளது. நீதி அமைச்சர், பொலிஸ்மா அதிபர் அற்றும் அரச அதி­கா­ரிகள் சில­ருக்கும் அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளது. பின்னர் நவ­விக்கு அனுப்பி வைக்­கப்­பட்ட கடி­தத்­துடன் ஒப்­பிட்டு பார்த்தேன்.
இதை அனுப்­பி­வைத்த நபர் மீண்டும் அதே கடி­தத்தை சில மாற்­றங்­களை செய்து அனுப்பி வைத்­துள்ளார் என்றே தெரி­கின்­றது. இந்த கடிதம் குறித்து சட்­டமா அதி­ப­ருடன் பேச முன்னர் முதலில் இந்த கடி­தத்தை நான் படித்தேன். இதில் முதல் வாக்­கியம் “நாம் முஸ்லிம் சமூ­கத்­தினர்” என்ற கார­ணி­க­ளுடன் ஆரம்­பித்­துள்­ளது. இரண்டாம் வாக்­கி­யத்தில் இஸ்லாம் என்றால் என்ன என்ற கார­ணி­களை முன்­வை­த்துள்ளார். இறு­தி­யாக இந்த நாட்டின் அமைதி நல்­லி­ணக்­கத்தை நாச­மாக்க எந்த அமைப்­பு­க­ளுக்கும் அனு­ம­திக்க முடி­யாது. எனினும் சில இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத அமைப்­புகள் காத்­தான்­கு­டியில் உரு­வாகி வரு­கின்­றது என்று கூறி சில கார­ணி­களை முன்­வைத்­துள்ளார். இதில் இருந்து எனக்கு என்ன விளங்­கி­யது என்றால், என்.டி.ஜே என்ற அமைப்பு அதா­வது தேசிய தவ்ஹித் ஜமாஅத் மற்றும் சஹ்ரான் என்ற அவ்­வ­மைப்பின் தலை­வரின் மூலம் உரு­வாக்­கப்­பட்டு, அதனால் அங்கு மக்கள் குழப்­ப­ம­டைந்­துள்­ள­தா­கவும் அதனை தீர்த்து தாருங்கள் என்­றுமே அதில் கூறப்­பட்­டுள்­ள­தாக நான் கரு­தினேன். இந்த கடி­தத்­துடன் சில புகைப்­ப­டங்­களும் இணைக்­கப்­பட்­டது. இதில் குறிப்­பிட்ட சில படங்­களை நான் அவ­தா­னித்தேன். இதில் நடு­வீ­தியில் வாள்­க­ளுடன் சிலர் இருப்­பதும் சிலர் காய­ம­டைந்­துள்­ள­தா­கவும் இருந்­தது. இதில் ஒரு நபர் அணிந்­துள்ள ரி-ஷர்ட் இல் வெள்­ளை­நிற அடை­யாளம் ஒன்று உள்­ளது. இது ஐ.எஸ் அமைப்பின் சின்­னத்­துக்கு ஒப்­பான ஒன்று. மற்­ற­யதில் சஹ்ரான் என்ற நபர் இருப்­பதும் உள்­ளது.

நான் சட்­டமா அதி­ப­ருடன் இது பற்றிப் பேசினேன். சட்­டமா அதிபர் ஜெயந்த ஜெய­சூ­ரி­ய­விடம் இந்த கார­ணி­களை கூறி­ய­வுடன் அவரும் ஆச்­ச­ரி­ய­ம­டைந்தார். இலங்­கையில் இவ்­வாறு இடம்­பெ­று­கின்­றதா என கேள்வி எழுப்­பினார். இதற்கு பிர­தேச பொலிஸை பயன்­ப­டுத்தி சரி­வ­ராது பிர­தான விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க வேண்டும் என கூறினார்.

இந்த கடி­தத்தில் அவர் கூறிய விட­யங்­களை நான் சட்­டமா அதி­ப­ருக்கு கூறினேன். அதனை வாசித்துக் காட்­டினேன். அதற்­க­மைய அவர் விசா­ரணை அறிக்­கை­களை பெற்­றுத்­த­ரும்­படி கேட்­டுக்­கொண்டார். சாதா­ர­ண­மாக எமக்கு வரும் கடி­தத்தை பிரதி ஒன்றை பொலிஸ்மா அதி­ப­ருக்கு அனுப்­புவோம். ஆனால் இம்­முறை நான் அவ்­வாறு செய்­யாது சஹ்லான் மௌல­வியின் கடி­தத்தின் பிர­தி­யுடன் சட்­டமா அதி­பரின் கோரிக்­கையை உள்­ள­டக்கி அனுப்­பினேன். பொலிஸ்மா அதி­ப­ருக்கு விசா­ரணை நடத்தி அறிக்­கையை தர­வேண்டும் என நான் 2017 ஆம் ஆண்டு அனுப்­பினேன். சில காலங்­களின் பின்னர் 2017. 07. 21 ஆம திகதி மீண்டும் சஹ்லான் மௌலவி சட்­டமா அதி­ப­ருக்கு கடிதம் ஒன்­றினை அனுப்­பினார். அதா­வது முதலில் அவர் அனுப்­பிய கடிதம் குறித்து கலந்­து­ரை­யாடல் ஒன்­றினை ஏற்­ப­டுத்தித் தரு­மாறு அவர் கோரி­யி­ருந்தார். கலந்­து­ரை­யா­டலை ஏற்­ப­டுத்தும் அதி­காரம் எனக்கு இருக்­க­வில்லை. ஆனால் இந்த கடிதம் குறித்து நான் சற்று அவ­தானம் செலுத்­தி­யி­ருந்தேன். இரண்­டா­வது கடிதம் கிடைத்­த­வுடன் மீண்டும் கடிதம் ஒன்­றினை அவ­ருக்கு அனுப்­பினேன். அதில் பொலிஸ்மா அதி­ப­ருக்கு நாம் உரிய கார­ணி­களை கொடுத்­துள்­ள­தாக நான் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தேன். மீண்டும் சஹ்லான் மௌலவி கடிதம் ஒன்­றினை அனுப்­பினார். அதில் எமது முயற்­சி­க­ளுக்கு நன்­றி­களை தெரி­வித்திருந்தார்.

எனது கண்­கா­ணிப்பு அதி­கா­ரியின் பதி­வேட்டில் சஹ்லான் மௌலவி தொடர்­பு­கொண்ட இலக்­கத்தை பதிவு செய்­தி­ருந்தேன். சஹ்ரான் குறித்து விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு அவர்­க­ளுக்கு பிணை வழங்க முயற்­சிகள் எடுக்­கப்­ப­டு­கின்­றது அதனை தடுக்க வேண்டும் என கூறினார்.

அதற்­க­மைய காத்­தான்­குடி பிரதி பொலிஸ்மா அதி­ப­ருக்கு என்னை சந்­திக்க தகவல் அனுப்­பினேன். கஸ்­தூரி ரத்ன என்ற நபர் என்னை வந்து சந்­தித்தார். அவர் முழு­மை­யான அறிக்கை ஒன்­றினை என்­னிடம் ஒப்­ப­டைத்தார். முழு சம்­ப­வமும் அதில் இருந்­தது. தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பும் எமக்கு கடிதம் அனுப்­பிய அமைப்பும் ஆகிய இரண்டு அமைப்­புமே மோதல்­களில் ஈடு­பட்டு கைது­செய்­யப்­பட்­டுள்­ள­தாக தெரிந்­தது. பின்னர் இந்த நபர்­க­ளுக்கு பிணை வழங்க வேண்டாம் எனவும் அதனை தடுக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என ஆலோ­சனை வழங்­கினேன்.

சஹ்லான் மௌல­விக்கு மீண்டும் நான் அறி­யப்­ப­டுத்­தினேன். நீங்கள் கோரிய காரணி குறித்து நட­வ­டிக்கை எடுக்க ஆலோ­சனை வழங்­கி­யுள்ளேன். இது குறித்து மேல­திக தக­வல்கள் கிடைத்தால் காத்­தான்­குடி போலிஸ் நிலை­யத்தில் கூறு­மாறும் கடி­தத்தில் தெரிவித்தேன். அதன் பின்னர் சஹ்லான் மௌலவி எனக்கு கடிதம் அனுப்­ப­வில்லை. ஆனால் அவர் அனுப்­பிய கடி­தங்கள் குறித்து நான் பொலிஸ்மா அதி­ப­ருக்கு விடுத்த கோரிக்­கைக்கு இன்­று­வரை எமக்கு எந்த பதிலும் வர­வில்லை.

சஹ்லான் மௌலவி கொடுத்த கடிதம் தொடர்பில் நாம் சகல நட­வ­டிக்­கை­க­ளையும் எடுத்தோம். அவர் இந்த தாக்­குதல் குறித்து தூர­நோக்­குடன் சிந்­தித்து இந்த கடி­தத்தை எம்­மிடம் வழங்கியுள்ள நிலையில் அதற்­கான நட­வ­டிக்கை எடுத்­துள்ள நிலையில் குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு ஏன் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை என்­பதே எமது கேள்வி.

சஹ்ரான் பயங்­க­ர­வாதி என்றால் எம்­மிடம் ஏன் கேட்க வேண்டும், முதலில் கைது செய்திருக்க வேண்டும். எம்மைப் பார்த்துகொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

காத்தான்குடி ஓ.ஐ.சி. வந்தவுடன், குறித்த புகைப்படங்களை காட்டினேன். காத்தான்குடியில் இவ்வாறு மோசமாக நடந்துள்ள நிலையில் பொலிஸ் வேடிக்கை பார்க்கிறீர்களா என கேட்டேன்.

அரசியல்வாதிகளின் அழுத்தம் காரணமாக செய்ய முடியாது என்றார். என்றாலும் அரசியல் செயற்பாடுகளுக்காக பொதுமக்களை துன்புறுத்த இடமளிப்பதா என்ற கேள்வியே எம்மிடம் இருந்தது.

காத்தான்குடி விடயத்தில் எனக்கு உரிய காரியம் நடக்க வேண்டும் என்றே நினைத்தேன். அதனால் தான் உயர் அதிகாரிகளுக்கு கூறியும் ஓ.ஐ.சி யை வரவழைத்தும் முயற்சிகளை எடுத்தேன் என்றார்.

(ஆர்.யசி)

Web Design by The Design Lanka