இனவாதம் இல்லாவிட்டால் நாடு முன்னோக்கி பயணிக்கும் » Sri Lanka Muslim

இனவாதம் இல்லாவிட்டால் நாடு முன்னோக்கி பயணிக்கும்

ranil

Contributors
author image

Editorial Team

அரசியல் பழிவாங்கல்களும், இனவாதமும் இல்லாவிட்டால் நாடு முன்னோக்கி பயணிக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், திகன சம்பவத்தில் சொத்துக்களை இழந்தவர்களுக்கும் நட்டஈடு வழங்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனை கூறினார்.

கட்சியின் முடிவுகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டமைக்கு கூடியிருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், இதற்கு முன்னர் குறித்த விடயங்களுக்கான நட்டஈட்டை வழங்க முடியாமல் போனமைக்கு தனது வருத்தத்தையும் தெரிவித்தார்.

இதற்கமைய மக்களுக்கு வழங்கிய உறுதி மொழிக்கமைய இந்த நட்டஈட்டு தொகை வழங்கப்படுவதாகவும், ரங்கே பண்டார அரசியல் ரீதியான பழிவாங்களுக்கு உள்ளகியுள்ளதால் அவர் கலக்கமடைந்து காணப்படுவதாகவும் கூறினார்.

ஒரு சிலர் அரசியல் பழிவாங்கல்களுக்கும் மேலும் சிலர் இனவாதத்திற்கு இறையாகியுள்ளதாகவும் பிரதம் தெரிவித்தார்.

சிலர் இனவாதத்தால் வெற்றிப்பெற முயற்சிப்பதாக கூறிய அவர் அவ்வாறு செய்ய முடியாது எனவும் தெரிவித்ததோடு, நாடு முன்னோக்கி பயணிக்க வேண்டுமாயின் வெறுமனே வருமானம் மாத்திரம் போதாது எனவும் கூறினார்.

நாடு முன்னேற வேண்டுமாயின் ஒழுக்கமுள்ள கொள்கைகள் அவசியம் என தெரிவித்த பிரதமர், அவ்வாறான நாட்டில் அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெறாது எனவும், அதற்கு இனவாத பிரச்சினைகள் ஏற்பட இடமளிக்க கூடாது எனவும் பிரதமர் தெரிவித்தார்.

எனவே, அரசியல் பழிவாங்கல்களையும் இனவாதத்தையும் இல்லாதொழித்தால் நாடு முன்னோக்கி பயணிக்கும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Web Design by The Design Lanka