சுஷ்மா சுவ்ராஜ் மாரடைப்பால் காலமானார் » Sri Lanka Muslim

சுஷ்மா சுவ்ராஜ் மாரடைப்பால் காலமானார்

susma

Contributors
author image

Editorial Team

பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவ்ராஜ் திடீர் மாரடைப்பால் காலமானார்.

இவர் ஹரியான மாநிலத்தில் 1953ஆம் ஆண்டு பிறந்தார். 7 முறை மக்களவை முதல்வராக செயல்பட்டுள்ள சுஷ்மா சுவ்ராஜ், டெல்லி மாநில முதல்வராகவும் இருந்துள்ளார்.

2014 முதல் 2019 வரையிலான பாஜக ஆட்சியின் போது வெளிவிவகார அமைச்சராக சிறப்பாக செயல்பட்டு நாட்டு மக்களின் மத்தியில் நன்மதிப்பை பெற்றார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பிறகு இரண்டாவது பெண் வெளிவிவகாரஅமைச்சர் என்ற பெருமையை பெற்றவர் சுஷ்மா.

இந்தநிலையில் கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிக்கிச்சை செய்து கொண்டார்.

தற்போது சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள எம்ய்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுஷ்மா, மாரடைப்பு காரணமாக காலமானார்.

Web Design by The Design Lanka