ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்த பின்னரே புதிய கூட்டணியை அமைக்க வேண்டும் » Sri Lanka Muslim

ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்த பின்னரே புதிய கூட்டணியை அமைக்க வேண்டும்

????????????????????????????????????

Contributors
author image

Editorial Team

ஐக்கிய தேசிய கட்சியினால் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்த பின்னரே புதிய கூட்டணியை அமைக்க வேண்டும் என கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

விஷேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் ஜனநாயக தேசிய முன்னணியை கூடிய விரைவில் அமைக்க தானும் பிரதமரும் இணக்கம் தெரிவித்துள்ளதாக இன்று செய்திகள் வெளியாகி இருந்ததாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறான ஒரு கூட்டணியை அமைக்க தான் நூற்று நூறு அல்ல நூற்றுக்கு இலட்சம் முறை இணக்கம் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதுடன் பிரபல கட்சிகளின் கொள்கைகள் அடிப்படையில் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்த பின்னரே கூட்டணி அமைக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அது தன்னுடைய தனிப்பட்ட கருத்து எனவும் அவ்வாறு செய்தால் மாத்திரமே மேலும் கட்சிகள் இணைந்து வெற்றி கூட்டணயாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Web Design by The Design Lanka