வடக்கு கிழக்கு அபிவிருத்திக்காக 8.24 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு – நிதியமைச்சர் » Sri Lanka Muslim

வடக்கு கிழக்கு அபிவிருத்திக்காக 8.24 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு – நிதியமைச்சர்

IMG_20190810_100726

Contributors
author image

Editorial Team

வட மாகாணத்தின் கைத்தொழில்துறைகள் அபிவிருத்தி செய்யப்படும் என்றுகாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் முதற்தடவையாக வடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்தி பணிகளுக்காக 8.24 பில்லியன் ரூபா நிதி கம்பெரலிய தேசிய அபிவிருத்தித் திட்த்தின் கீழ் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் நிதி அமைச்சர் சுட்டிக்காட்டினார். கம்பெரலிய தேசிய அபிவிருத்தித் திட்த்தின் கீழ் 17 343 திட்டங்கள் வடக்கில் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.15

புகழ்பெற்ற நீச்சல் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தன் என்ற குமார் ஆனந்தனின் நினைவாக யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீச்சல் தடாகத்தை நிதி அமைச்சர் மங்கள சமரவீர நேற்று திறந்து உரையாற்றிய அமைச்சர் முதற்கட்டமாக 50 கூட்டுறவு சங்கங்களின் கீழுள்ள கைத்தொழில்களை அபிவிருத்தி செய்வதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கறுவாடு உற்பத்தி, பழச்சாறு தயாரிப்பு, எண்ணெய் உற்பத்தி ஆலைகள் என்பன இதில் முக்கியத்துவம் பெறுகின்றன என்றும் கூறினார்.
6பொருளாதாரத்தில் இந்தியா துரித வளர்ச்சியடைந்துள்ளது. இந்தியாவுடன் நாங்கள் தொடர்புகளை ஏற்படுத்திகொள்ள வேண்டும்.இந்திய உதவியுடன் பாலாலி விமான நிலையம் அபிவிருத்தி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை துறைமுகம் 45 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள நிலையில் இந்து சமுத்திரத்தில் இது இந்தியாவுக்கான நுழைவாயிலாக இருக்கும் என்றும் தெரிவித்த அவர் கொழும்பு துறைமுகம் காரணமாக கொழும்பு நகரும், கட்டுநாயக்க விமான நிலையம் காரணமாக கம்பாஹா மாவட்டமும் அபிவிருத்தியடைந்தன.12இதேபோன்று இந்த இணைப்பு நடவடிக்கைகள் வடக்கின் அபிவிருத்திக்கு பெரிய உந்து சக்தியாக இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.thumbnail 4நுண்நிதி கடன் பொறிகளில் சிக்கிய 45,000 பெண்களுக்கு 1.4 பில்லியன் ரூபாய் கடன் நிவாரணத்தையும் வழங்கியுள்ளோம். நீண்ட கால நிலையான வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறோம். மத்திய வங்கியுடன் சேர்ந்து அரசாங்கம் வடக்கிற்கான பொருளாதார மேம்பாட்டு கட்டமைப்பை வெளியிட்டது.thumbnail 2வடக்கு பொருளாதார பிரச்சினைகள் முறையாக திட்டமிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த திட்டங்கள் பலனளிப்பதை உறுதி செய்வதற்காக வரவுசெலவுத்தில் வாக்குறுதியளிக்கப்பட்ட 2.5 பில்லியன் ரூபாய் நிதிக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கம்பெரலிய திட்டமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.thumbnail 3அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மூன்றில் ஒரு பகுதி மீன் உற்பத்தியை பூர்த்தி செய்யும் மயிலிட்டி துறைமுகமும் அபிவிருத்தி செய்யப்பட்டுவருகிறது.

விரைவில் இந்தத் துறைமுகம் திறந்து வைக்கப்படவுள்ளது. இதற்கென ஒரு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளது என்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

Web Design by The Design Lanka