பாடசாலை மாணவர்களின் கணித அறிவு மட்டத்தை விருத்தி செய்ய விசேட வேலைத்திட்டம் » Sri Lanka Muslim

பாடசாலை மாணவர்களின் கணித அறிவு மட்டத்தை விருத்தி செய்ய விசேட வேலைத்திட்டம்

IMG_20190810_101138

Contributors
author image

Editorial Team

தரம் ஒன்று முதல் 11 வரை கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் கணித பாடத்தை விரும்பமான பாடமாக மாற்றியமைக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை கல்வியமைச்சின் கணித பிரிவு ஆரம்பித்துள்ளது.

கணித எண்ணக்கருக்களை அன்றாட வாழ்க்கையில் பிரயோகப்படுத்துவதன் மூலம் மாணவர்களுக்கு இலகுவாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் செயற்பாட்டு ரீதியாக கணிதத்தை தெளிவுபடுத்துவது இதன்நோக்கமாகும்.

மாணவர்கள் மத்தியில் ஆக்கத்திறன், சிக்கல்களை தீர்க்கும் வல்லமை, தொடர்பாடல் திறன், தர்க்க ரீதியான சிந்தனை போன்ற திறமைகள் விருத்தி செய்யப்படும். இதற்கிணைவாக கற்றல் வள உபகரணங்களும் பயிற்சிப் புத்தகங்களும் தயார்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பில் 150 பாடசாலைகளை சேர்ந்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Web Design by The Design Lanka