ஜனாதிபதித் தேர்தல்; கருத்து வெளியிட்டுள்ள அம்பாறை மாவட்ட மக்கள் » Sri Lanka Muslim

ஜனாதிபதித் தேர்தல்; கருத்து வெளியிட்டுள்ள அம்பாறை மாவட்ட மக்கள்

vote5.jpg8_

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

ஜனாதிபதித் தேர்தல் நிலவரம் சூடுபிடித்து இருக்கின்ற நிலையில், அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு தரப்புகள் தத்தமது கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக அன்றாட நாள் தொழிலில் ஈடுபடும் ஆட்டோ சாரதிகள் மீன் விற்பனையாளர்கள் சந்தை குத்தகைக்காரர்கள் தனியாக வாழ்வாதாரங்களை கொண்டு குடும்பங்களை வழிநடாத்தும் பெண்கள் இளைஞர்கள் என பல்வேறு மட்டங்களில் எமது பிராந்திய ஊடகவியலார் குழு நேர்காணலை மேற்கொண்டிருந்தது.

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மொழி பேசுகின்ற இரு சமூகங்களையும் உள்ளடக்கியதாக ஜனாதிபதித் தேர்தல் குறித்த கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.

இதில் நெருங்கிக் கொண்டிருக்கின்ற இத்தேர்தலுக்காக பல கட்சிகள் மும்முரமாக யார் யாரை போட்டியாளராக நியமிப்பது என்று குழம்பிப் போயுள்ள சூழ்நிலையில் பொது மக்களும் அன்றாடம் இதனை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தல் குறித்து மக்களின் நிலைப்பாடு இவ்வாறு அமைகின்றது.

மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள தலைமைகள் சிறுபான்மை மக்களுக்கு எந்தவித தீர்வினையும் பெற்றுக் கொடுக்கவில்லை.

சிறுபான்மை தமிழ் முஸ்லிம் மக்களின் கோரிக்கைகள் திட்டங்களுக்கும் இன்றுவரை கிடப்பிலேயே கிடக்கிறது.

சிறுபான்மை மக்களின் தீர்வு திட்டங்களுக்கு சிறுபான்மை மக்களின் தலைமைகளை அழைத்து உத்தரவாதத்தை எழுத்துமூலம் கொடுக்கிறார்களோ அவர்கள் எதிர்காலத்தில் ஜனாதிபதி தேர்தலில் ஆதரிப்போம் அது யாராக இருந்தாலும் இதுவே எங்கள் நிலைப்பாடு என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

அடுத்து ரணசிங்க பிரேமதாச ஆட்சி காலத்தில் நாங்கள் சிறுவர்களாக இருந்த போது கேட்டிருக்கின்றோம். அவரது ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்திருக்கிறார்கள் என்று. தந்தையைப் போன்றே மகன் சஜித் பிரேமதாச மக்களுக்கு நல்ல ஒரு நிம்மதியான ஆட்சியை கொடுப்பார் என்று நாங்கள் நம்புகின்றோம்.

சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக வர வேண்டும் என்று விரும்புகிறோம்.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் மக்கள் விரக்தியில் இருந்த மக்கள் புதியதொரு நிம்மதியான ஆட்சியை எதிர்பார்த்த அந்த வேளை நல்லாட்சி என்று கொண்டுவரப்பட்ட மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சியும் மக்களுக்கு நிம்மதியை கொடுக்கவில்லை.

நாங்கள் எமது சமூகத்தை கட்டியெழுப்ப கூடிய சமூகத்துக்கு சேவை செய்யக்கூடிய நல்ல ஆளுமையையே மக்கள் இன்றைய சூழ்நிலையில் எதிர்பாத்திருக்கின்றனர். அவர்களையே இந்த நாட்டின் தலைவராக்குவற்கு முனைவோம்.எனவும் எமது தமிழ் தேசிய தலைமைகள் யாரை ஆதரிப்பார்கள் நாங்களும் அவர்களை ஆதரிப்போம் ஏனெனில் எமது தலைமைகள் பல்வேறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் உடன்படிக்கைகளின் எமக்கு ஆலோசனைகள் வழங்குவார். அதன் நிமிர்த்தம் நாங்களும் அவர்களை ஆதரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

இன்றைய காலகட்டத்தில் வட கிழக்கில் தமிழ் தலைமைகளாக கூட்டமைப்பு மாத்திரமே உள்ளன. அதனால் அவர்களின் ஆலோசனைப்படி நாங்கள் வாக்களிப்போம்.

எமது அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தளவில் இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகம் கல்முனை தமிழர்களின் பிரச்சினைகள் நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழ் தேசியத் தலைமைகள் எமது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க தவறியுள்ளனர். இது காலா காலமாய் கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்களுக்கு செய்த துரோகமாகவே பார்க்கின்றனர்.

இதுவரை காலமும் கூட்டமைப்பின் நம்பி இருந்த மக்கள் அன்று மாற்று தலைமைகளை ஏற்க வேண்டிய சூழ்நிலையில் அம்பாறையில் காணப்படுகிறது. சூழ்நிலை அறிந்து எமது விரைவாக தீர்வினைப் பெற்றுக் கொடுத்தால் மாத்திரமே தமிழ் தேசிய கூட்டமைப்பை கல்முனை மக்கள் ஏற்றுக் கொள்வதும் அவர்களை கருத்துக்கு மதிப்பளிப்பர் இல்லையேல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எதிர்கால அரசியல் கேள்விக்குறியாக மாறும்.

காலகாலமாக ஆட்சியைத் ஆட்சியாளர்கள் எங்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருகிறார். ஆதலால் யார் ஆட்சிக்கு வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை நாங்கள் தொழில் செய்தால் மாத்திரமே எங்களுடைய வாழ்க்கையை நடார்த்துகின்றோம் என ஊடகங்களிடம் குறிப்பிட்டனர்.

(அம்பாறை நிருபர் ஷிஹான்)

Web Design by The Design Lanka