முஸ்லிம்களை இலக்கு வைப்பதில் விஜயதாசவின் பங்கு » Sri Lanka Muslim

முஸ்லிம்களை இலக்கு வைப்பதில் விஜயதாசவின் பங்கு

vijaya

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

A.L.Thavam

முஸ்லிம்களுக்கு எதிரான Systematic Character Assassination செய்பவர் விஜயதாச ராஜபக்ச………..


நன்கு முறைப்படுத்தப்பட்ட முறையில் முஸ்லிம்களை இலக்கு வைப்பதில் – குறிப்பாக முஸ்லிம்களின் பண்புகளை/குணவியல்புகளை அழிப்பதில் (Systematic Character Assassination) விஜயதாச ராஜபக்ச மிகமுக்கிய பங்குவகிப்பவர். அவர் ஆளுங்கட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியில் இருந்தாலும் அவருடைய இந்த இலக்கு மாறாது. அவர் தற்போது தனது வாக்கு வங்கியாக தளம் அமைத்திருக்கும் நுகேகொட – கடும்போக்கு சிங்கள பௌத்தவாதத்தின் கேந்திர நிலையமாக அமைந்திருப்பதும் அவரின் முஸ்லிம் விரோத போக்கிற்கு பங்களிப்பு செய்யலாம்.

ஆனால், இலங்கை சட்டத்துறையில் கற்பிக்கப்படும் / நீதிமன்றங்களில் குறித்துக்காட்டப்படும் பல விடயங்கள் பற்றி பல சட்ட நுணுக்க புத்தகங்களை எழுதியவர் அவர். முன்னாள் நீதியரசர் சிரானி பண்டாரநாயகாவை சட்டத்திற்கு விரோதமாக அகற்றுவதற்கு எதிராக அன்றைய ஆட்சியாளர் மகிந்தவை எதிர்த்து நின்றவர். ஆனால், முஸ்லிம்களின் விடயத்தில் அவருக்கு எப்போதும் நீதி – நேர்மை – நியாயமற்ற விமர்சனப்பார்வை இருக்கிறது.

முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகள் உச்சத்தை அடைந்து நிற்பதில் – கருத்தியல் பரப்பில் இவர் ஊட்டிய உரமும் ஒரு காரணம்தான். இவர் முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசியதை காண்பது அபூர்வமாகவே இதுவரை இருந்திருக்கிறது. ஆனால், விமர்சனங்களை தாராளமாக காணலாம். அதிலும், பாராளுமன்றத்தினுள்ளேயே இவர் அதிகம் பேசியுள்ளார் என்பது மிகவும் மனவேதனையான விடயமாகும்.

இவருக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், மார்க்க தலைமைகளும் இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் எவ்வளவோ எடுத்துகூறி இருப்பதை நாம் அறிவோம். ஆனால், அவர் மாறவில்லை. மாறும் அறிகுறிகளும் தென்படவில்லை. நேற்று முஸ்லிம்கள் தொடர்பில் இவர் கூறியிருக்கும் கருத்துக்களை வாசிக்கக்கூடியதாக இருந்தது. மனம் வேதனையில் நொந்து போனது.

இவருக்கு இதயத்திலும் மூளையிலும் கோளாறு இருக்க வேண்டும். இவரை அல்லாஹ்விடத்தில் பாரம்கொடுப்பதை தவிர வேறுவழியில்லை. அல்லாஹ் அவருக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும்.

Web Design by The Design Lanka