55 க்கும் மேற்பட்டோர் கையெழுத்து » Sri Lanka Muslim

55 க்கும் மேற்பட்டோர் கையெழுத்து

1541645360-unp-2

Contributors
author image

Editorial Team

ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதற்காக கட்சியின்  செயற்குழு, நாடாளுமன்ற குழு கூட்டங்களை கூட்டுமாறு கோரி, ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் சிலர், தங்களது கையொப்பமிட்ட கடிதமொன்றை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளனர்.

குறித்த கடிதத்தில் கட்சியின் உறுப்பினர்களில் 55 க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுவதுடன், கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்கும் பெரும்பான்மை உறுப்பினர்களாலேயே இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Web Design by The Design Lanka