வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை, அரசாங்கம் மீளக் கட்டியெழுப்பியுள்ளது » Sri Lanka Muslim

வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை, அரசாங்கம் மீளக் கட்டியெழுப்பியுள்ளது

IMG_20190812_084325

Contributors
author image

Editorial Team

வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை, பல சவால்களுக்கு மத்தியில், சமகால அரசாங்கம் மீளக் கட்டியெழுப்பி இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

2018 ஆம் ஆண்டு குருணாகல மாவட்டத்தில் உற்பத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்கும் உரையாற்றிய பிரதமர் சதகால அரசாங்கம் அனைத்து பிரஜைகளுக்கும் ஒரு வளமான எதிர்காலத்தை உறுதிப்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.67845253 10157606783123184 4871338648559157248 n

நாடு ஒரு அபிவிருத்தி அடைந்த நாடாக முன்னேற்றம் காண்பதா அல்லது அழிவுப் பாதைக்கான காலத்தை நோக்கி நகர்வதா என்பதை தீர்மானிக்கும் தருணம் உருவாகி உள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். பதவியிலிருந்த பத்து வருட காலத்தில் செய்யத் தவறிய அபிவிருத்தி நடவடிக்கைகளை புது முகங்கள் கொண்டு எவ்வாறு ராஜபக்ஷமார் மேற்கொள்வர் என்றும் பிரதமர் கேள்வி எழுப்பினார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நாட்டை கட்டியெழுப்பும் முயற்சிகளின் நன்மைகளை பொதுமக்கள் பெற்று வருவதாக இங்கு உரையாற்றிய அமைச்சர் ;அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். சில சக்திகள,; இனவாதம் மற்றும் மத அடிப்படை வாதத்தை பயன்படுதட்தி ஆட்சியை கைப்பற்ற முனைகின்றன.

விவசாய சமூகத்தின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக இங்கு உரையாற்றிய அமைச்சர் பீ ஹரிசன் தெரிவித்தார்.

அடுத்த பெரும்போகத்திலிருந்து நெல்லின் விலை ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்படும்; என்று குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

Web Design by The Design Lanka