தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றங்களை பூர்த்தி செய்யுமாறு பணிப்பு » Sri Lanka Muslim

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றங்களை பூர்த்தி செய்யுமாறு பணிப்பு

teacher

Contributors
author image

Editorial Team

அடுத்த வருடம் முதலாம் தவணை கல்வி நடவடிக்கை ஆரம்பமாவதற்கு முன்னர் தேசிய பாடசாலைகளின்; ஆசிரியர் இடமாற்றங்களை பூர்த்தி செய்யுமாறு கலவி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

கலவி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில், 2020ம் ஆண்டுக்கான ஆசிரியர் இடமாற்றங்களுக்காக கல்வியமைச்சுக்கு கிடைக்கப் பெற்ற ஆறாயிரம் விண்ணப்பங்களின் அடிப்படையிலேயே இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

பல வருடத்திற்கு மேலாக ஒரே பாடசாலையில் சேவை ஆற்றிய ஆசிரியர்களின் இரண்டாயிரம் விண்ணப்பங்கள் இவற்றுள் அடங்கும். ஆசிரியர் தொழிற்சங்க பரிந்துரைகளின் அடிப்படையிலும் தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றங்கள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Web Design by The Design Lanka