வான் கதவுகள் திறப்பு - தாழ்நிலப் பிரதேச மக்களுக்கு அறிவுறுத்தல் » Sri Lanka Muslim

வான் கதவுகள் திறப்பு – தாழ்நிலப் பிரதேச மக்களுக்கு அறிவுறுத்தல்

IMG_20190813_061702

Contributors
author image

Editorial Team

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பெய்து வரும் மழையின் காரணமாக நீர் நிலைகளின் பலவற்றின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

நீரேந்து நிலைகளுக்கு அருகிலும் தாழ்நிலப் பிரதேசங்களிலும் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

லக்சபான நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. கெனியன் நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு ஒன்றும் திறக்கப்பட்டுள்ளது. மஹாவலி மற்றும் களனி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

இதேவேளை மழையுடனான காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் சில தினங்களுக்கு நீடிக்கும் என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Web Design by The Design Lanka