காஷ்மீரில் நொடி நொடியாக கழிந்த 5 நாட்கள் - ஒரு மாணவியின் நேரடி அனுபவம் » Sri Lanka Muslim

காஷ்மீரில் நொடி நொடியாக கழிந்த 5 நாட்கள் – ஒரு மாணவியின் நேரடி அனுபவம்

IMG_20190814_094011

Contributors
author image

BBC

அதிக வன்முறை மற்றும் துரோகத்தை சந்தித்துள்ள, மோதல் நடைபெறும் பகுதிகளில், எந்தவொரு தகவலும் சரியானதைப் போல கருதப்படும் சூழ்நிலையில்தான், போலிச் செய்திகளின் தாக்கத்தை அதன் முழுமையான அர்த்தத்தில் புரிந்து கொள்ள முடியும். வெள்ளிக்கிழமை முதல் திங்கள்கிழமை மாலை வரை வெவ்வேறு மக்கள் சொல்வதைக் கேட்டபடி நாங்கள் அமர்ந்திருந்தோம்.

கூடுதல் ராணுவத்தினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டது, யாத்ரிகர்களும், காஷ்மீரி அல்லாதவர்களும் வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டது ஆகியவை பற்றி அவர்கள் பேசினார்கள். எங்களுக்கு எதுவும் தெரியவில்லை.

ஜம்மு காஷ்மீரை மூன்றாகப் பிரிக்கும் அரசின் திட்டம் பற்றி, காஷ்மீரை யூனியன் பிரதேசமாக ஆக்குவது பற்றி, ஜம்முவுக்கு மாநில அந்தஸ்து தருவது பற்றி, 370 மற்றும் 35ஏ பிரிவுகள் ரத்து பற்றி, யாசின் மாலிக் மரணம் பற்றி சிலர் பேசிக் கொண்டார்கள். எல்லாருமே இவற்றில் ஏதாவது ஒரு விஷயத்தில் பந்தயம் கட்டிக் கொண்டிருந்தார்கள்.

திங்கள்கிழமை ஊரடங்கு என்று வதந்தி இருந்தது. கடுமையான மற்றும் நீண்ட ஊரடங்கு இருக்கும் என்ற அச்சம் காரணமாக லால் பஜாரில் இருந்து நயிட்கடாலில் உள்ள எனது வீட்டுக்கு நான் புறப்பட்டேன். சாலையில் இருந்த எல்லாரிடமும் ஏதோ ஓர் அவசரம் தெரிந்தது.

ஏ.டி.எம்.களில் நிறைய பேர் வரிசையில் காத்திருந்தனர். மளிகை சாமான்கள் வாங்கும் கடைகளுக்கு வெளியே ஏராளமான கார்கள் காத்திருந்தன. வெள்ளிக்கிழமை இரவே மக்கள் அனைத்து இருப்பையும் வாங்கிவிட்டதால், பெட்ரோல் நிலையங்கள் காலியாகிவிட்டன.

சி.ஆர்.பி.எப். மற்றும் காவல் துறையினருக்காக ஓரளவுக்கு பெட்ரோல், டீசல் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், பொது மக்களுக்கு வழங்காமல் இருப்பு வைக்க வேண்டும் என்றும் தங்களுக்கு அறிவுறுத்தப் பட்டிருப்பதாக, என்னுடைய உறவினர் பெட்ரோல் வாங்கியபோது அங்கு ஊழியர்கள் கூறியுள்ளனர்.

ஆகஸ்ட் 6ஆம் தேதி என் உறவினருக்குத் தேர்வு இருந்தது. மாலையில் தீவிரமாக படித்துக் கொண்டிருந்தபோது, தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் இருந்து அவருக்குத் தகவல் வந்தது.

இரவு 10.30 மணிக்கு என் நண்பருக்கு நான் எஸ்.எம்.எஸ். அனுப்பிக் கொண்டிருந்தேன். நான் அனுப்பிய தகவல் அவரைச் சென்று சேரவில்லை. எனது இன்டர்நெட் இணைப்பு செயல்பாட்டில் இருந்தது. எனவே முழுமையாக முடக்கப்பட்டிருக்கும் என்ற சிந்தனையே எனக்கு வரவில்லை. என் பெற்றோர் டெல்லியில் இருந்தனர். எனவே என் தாயாருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு நான் தூங்கிவிட்டேன்.

அரசமைப்பு சட்டப்பிரிவு நீக்கியது இதுவரை காஷ்மீரில் நடந்தது என்ன?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

திங்கள்கிழமை

திங்கள்கிழமை காலை நான் எழுந்தபோது சமையலறையில் அமைதி நிலவியது. குலிஸ்தான் சேனலின் காலை நிகழ்ச்சிகளுடன் நான் எழுந்திருப்பது வழக்கம். ஆனால் எல்லாரும் வெறுமனே அமர்ந்து, காலை டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

அதிகாலை 4 மணியில் இருந்து நம் வீட்டுக்கு வெளியே ராணுவத்தினர் நிற்கிறார்கள் என்று எனக்கு சொன்னார்கள். டி.வி., வீட்டு தொலைபேசி, செல்போன்கள் எதுவுமே வேலை செய்யவில்லை. பெரும்பாலான ஊரடங்கு அமலின்போது பி.எஸ்.என்.எல். வீட்டு தொலைபேசிகள் செயல்பட அனுமதிப்பார்கள். ஆனால் இப்போது அதையும் துண்டித்து விட்டார்கள்.

உணவு பற்றி நாங்கள் கவலை அடைந்தோம். கடைகள் மூடப் பட்டிருந்தன. வெளியில் ஒரு வியாபாரி கூட இல்லை. கொஞ்சம் காய்கறிகள் வாங்கி வரலாம் என என் அங்கிள் வெளியில் சென்றார். ஆனால் அவரை ராணுவத்தினர் தடுத்து நிறுத்தி, வெளியில் செல்வது ஆபத்தானது என்று கூறியுள்ளனர்.

நீண்ட தூரம் நடந்து செல்வதற்குப் பயந்து அவர் வெறும் கையுடன் திரும்பிவிட்டார். ஒரு வியாபாரியை அவர் பார்த்திருக்கிறார். ஆனால் அவர் எல்லாவற்றையும் விற்றுவிட்டிருந்தார்.

நல்லவேளையாக எனது ஆண்ட்டி, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கொஞ்சம் இருப்பு வைத்திருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் இ்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் சூழல் ஏற்பட்டபோது, தாம் ஆயத்தமானதைப் பற்றி பெருமையாக விவரித்தார்.

“ஏறத்தாழ 2 மாதங்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களை நான் இருப்பு வைத்திருந்தேன்” என்று அவர் கூறினார். அதே ஆயத்த நிலையில், வார இறுதியில் அவர் நிறைய பொருட்களை வாங்கி வைத்திருந்தார்.

காஷ்மீரிகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. மசூதியில் தொழுகை முடிந்து திரும்பி வந்தவர்கள் மூலம், என்ன நடந்திருக்கும் என்பதை நாங்கள் கேள்விப்பட்டோம்.

பிற்பகலுக்குப் பிறகு 370வது சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார்கள். மசூதியில் சிலர் இதைத்தான் கூறினார்கள் என்று என்னுடைய அங்கிள் தெரிவித்தார். இது வதந்தியாக இருக்கும் என்று கூறி, இதை நாங்கள் நம்பவில்லை.

மாநில அரசு இல்லாத நிலையில், தேர்தலுக்கு முன்னதாக, அதுவும் இந்த விஷயம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, அரசியல் சட்டத்தை நிச்சயமாக ரத்து செய்திருக்க முடியாது என்று நான் வாதம் செய்தேன்.

எங்கள் எண்ணங்களை திசை திருப்புவதற்காக எனது மடிக்கணினியில் நாங்கள் திரைப்படங்கள் பார்த்தோம். மாலையில் டி.வி,யில் சில சேனல்களை ஒளிபரப்ப அவர்கள் அனுமதித்திருப்பதாகச் சொன்னார்கள். அதுவும் தூர்தர்ஷன் சேனல்கள் மட்டுமே ஒளிபரப்பாயின. மற்ற சேனல்கள் வரவில்லை.

செய்திகளை நாங்கள் போட்டதும், ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது, இப்போது காஷ்மீரும், ஜம்முவும் ஒரு யூனியன் பிரதேசம், லடாக் பிரிக்கப்பட்டு தனி யூனியன் பிரதேசமாக ஆக்கப்பட்டுள்ளது என்ற செய்தியைப் பார்த்தோம். 370 மற்றும் 35ஏ சட்டப் பிரிவுகள் ரத்து செய்யப்பட்டிருந்தன.

அரசமைப்பு சட்டப்பிரிவு நீக்கியது இதுவரை காஷ்மீரில் நடந்தது என்ன?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

எங்களுக்கு குறுகிய மற்றும் நீண்டகால நோக்கில் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்று நினைத்ததும் பயத்தால் என் கண்களில் நீர் நிரம்பியது. அடுத்த 15 நிமிடங்கள் நாங்கள் அனைவரும் மௌனமாக இருந்தோம். செய்தியை இன்னும் ஜீரணிக்க முடியாமல் இருந்தோம். நாங்கள் இதுவரை சந்தித்த துரோகங்களை நினைத்தபடி இருந்தோம். அந்தப் பட்டியலில் இன்னொரு துரோகமும் சேர்ந்துவிட்டதாக நினைத்தோம்.

எனது உறவினர் குழந்தைகள் 6 மற்றும் 9 வயதான அவர்களுக்குப் பொழுது போகவில்லை என்பதால், வீட்டுக்குள் இருக்கும் பூங்காவுக்கு விளையாடுவதற்காக சென்றோம். குழந்தைகளுக்குப் பிடித்த “ஐஸ் வாட்டர்” விளையாட்டை நாங்கள் அப்போதுதான் ஆரம்பித்தோம்.

கண்ணீர் புகைக்குண்டுகளின் புகை அந்தப் பூங்காவில் நிறைந்துவிட்டது. உறவுக் குழந்தைகளுக்கு இருமல் வந்துவிட்டது. கண்ணீரும் வந்துவிட்டது. ஆனால், விளையாட்டில் பிடிவாதமாக இருந்த அவர்கள் ஓடிக் கொண்டிருந்தனர். அவர்களை வலுக்கட்டாயமாக வீட்டுக்குள் இழுத்து, அறைகளைப் பூட்டிவிட்டு, புகையில் இருந்து மீள்வதற்கு முயற்சி செய்தோம்.

செவ்வாய்க்கிழமை

வியாழக்கிழமை டெல்லி செல்வதற்கு நான் விமான டிக்கெட் வாங்கியிருந்தேன். பத்திரமாக விமான நிலையத்துக்குச் செல்ல வேண்டுமே என்பது எங்கள் கவலையாக இருந்தது.

புதன்கிழமை அதிகாலையில், விமான நிலையத்துக்கு அருகில் உள்ள எனது அங்கிளின் வீட்டுக்குச் சென்றுவிடலாம் என நாங்கள் திட்டமிட்டிருந்தோம்.

Web Design by The Design Lanka