ஜீ-எஸ்-பீ வரிச்சலுகை மீண்டும் இலங்கைக்கு » Sri Lanka Muslim

ஜீ-எஸ்-பீ வரிச்சலுகை மீண்டும் இலங்கைக்கு

IMG_20190815_093311

Contributors
author image

Editorial Team

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பிரதிபலனாக ஜீ-எஸ்-பீ வரிச்சலுகை மீண்டும் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த இராஜதந்திர பயிற்சி நிறுவனத்தின் 23 ஆவது வருடாந்த பரிசளிப்பு நிகழ்வில் உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

  இந்த நிகழ்வில் மக்களின் பிரச்சினைகளை மிகவும் அமைதியான முறையில் தீர்ப்பதற்கு அரசாங்கத்தால் முடிந்துள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கைகளின் ஊடாக இலங்கை இந்து சமுத்திரத்தின் முக்கிய இடத்தினைப் பெற்றிருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

Web Design by The Design Lanka