பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த கோட்டாபாய » Sri Lanka Muslim

பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த கோட்டாபாய

IMG_20190815_093954

Contributors
author image

Editorial Team

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ  நேற்று (14) தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

அவருடன் இணைந்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட பலரும் தலதா மாளிகைக்கு விஜயம் செய்திருந்தனர்.

மல்வத்து பீடத்தின் மஹாநாயக்கர் திப்பட்டுவே ஸ்ரீசுமங்கல தேரரரிடமும் அவர் அசீர்வாதம் பெற்றுக்கொண்தோடு, பின்னர் அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரிடமும் கோட்டாபய ராஜபக்ஷ ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, கண்டி – கட்டுகெலே ஶ்ரீ செல்வ விநாயகர் பிள்ளையார் கோயில் மற்றும் மீரா மக்கம் பள்ளிவாசலுக்கும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் சென்றனர். அங்கு அவர்களுக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka