கஞ்சிபானை இம்ரானுடன் அதிகாரிகள் தொடர்பு ; தேரர் முறைப்பாடு » Sri Lanka Muslim

கஞ்சிபானை இம்ரானுடன் அதிகாரிகள் தொடர்பு ; தேரர் முறைப்பாடு

IMG_20190815_094445

Contributors
author image

Editorial Team

திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கஞ்சிபானி இம்ரானுடன்,  அந்தப் பிரிவின் அதிகாரிகள் சிலர் தொடர்பு வைத்துள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வண. மாகல்கந்தே சுதந்த தேரரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேல்மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் தலைமையின் கீழ் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தேரரின் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு குறித்த அதிகாரிகள் கஞ்சிபானி இம்ரானுடன் தொடர்பு வைத்துள்ளமை தெரியவந்தால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

Web Design by The Design Lanka