தௌஹீத் ஜமாத் அமைப்பு - பயிற்சி பெற்றதாக தெரிவிக்கப்படும் 3 பேர் கைது » Sri Lanka Muslim

தௌஹீத் ஜமாத் அமைப்பு – பயிற்சி பெற்றதாக தெரிவிக்கப்படும் 3 பேர் கைது

arrest-slk.polce

Contributors
author image

Editorial Team

தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாஷீமுடன் நுவரெலிய மற்றும் ஹம்பாந்தோட்டை முகாம்களில் பயிற்சி பெற்றதாக தெரிவிக்கப்படும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை பொலிசாருக்குக் கிடைத்த தகவலையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடாகப் பேச்சாளர் றுவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இவர்கள் ஜமாத்தே மில்லத்தே இப்ராஹிம் அமைப்பின் உறுப்பினர்கள் என கப்பட்டுள்ளது.

இதேவேளை சஹ்ரான் தொடர்பான விசாரணைக்காக அவரின் மனைவி அப்துல் காதர் பாத்திமா சாதியா நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார். அத்துடன் சஹ்ரானின் வீடு அமைந்துள்ள காத்தான்குடிப் பிரதேசத்தை சேர்ந்த சாட்சியாளர்கள் இருவரும் நேற்று நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர்.

Web Design by The Design Lanka