உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - விசாரணை அறிக்கை சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்படும் » Sri Lanka Muslim

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணை அறிக்கை சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்படும்

IMG_20190816_091531

Contributors
author image

Editorial Team

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்து அந்த அறிக்கையை விரைவில் சட்ட மா அதிபருக்கு கையளிக்க குற்ற விசாரணை திணைக்களம் எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேரக தெரிவித்தார்.

கண்டி பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்  உயிர்த்த ஞாயிறு சம்பவத்துடன் தொடர்புடைய சகலரும் தற்சமயம் கைது செய்யப்பட்டுள்ளது. அதற்கு மறைமுகமாக ஒத்துழைப்பு வழங்கியவர்கள் தற்சமயம் கைது செய்யப்பட்டு வருவதாகவும் தொவித்தார்
விசாரணைகளுக்கு இன்னும் சற்று காலம் தேவை எனவும், எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் குறுகிய காலத்தில் குற்ற விசாரணை திணைக்களத்தினால் பல தகவல்களை வெளிக்கொண்டு வர முடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.கண்டி எசல பெரஹராவை சிறப்பாக நடத்தி முடித்துள்ளோம். ஐந்து கும்பல் பெரஹராக்களையும், ஐந்து ரந்தோலி பெரஹராக்களையும் வெற்றிகரமாக நடத்தக் கூடியதாக இருந்தது. மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டலில் பாதுகாப்புத் திட்டங்க்ள அமுலாகின. அதற்கு முப்படையினரின் ஒத்துழைப்பு கிடைத்தது. தேசிய பாதுகாப்பு சிறப்பாக இருப்பதை எடுத்துக் காட்டக்கூடிய சிறந்த உதாரணமாக எசல வைபவம் பூர்த்தியான விதமாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை கண்டி வரலாற்று சிறப்புமிக்க எசல பெரஹரா சிறந்த முறையில் நிறைவடைந்ததன் மூலம் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். பெரஹரா நிறைவடைந்ததன் பின்னர் இராணுவத் தளபதி கண்டியில் ஊடகவியலாளர் சந்திப்பை மேற்கொண்டார். இதன் போது கருத்து வெளியிட்ட அவர், நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.508981f3bf59096843d7e270372116a0 XLபெருமளவு மக்கள் பெரஹராவைப் பார்த்து ரசித்தார்கள். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்திருந்தார்கள். இதன் மூலம், நாட்டில் மீண்டும் அமைதி நிலைநாட்டப்பட்டிருப்பது தெளிவாகிறது. முப்படையினர் மீதும், பொலிசார் மீதும் நாட்டு மக்கள் வைத்திருக்க நம்பிக்கை குறித்து நாம் மகிழ்ச்சி அடைகிறோம். எதிர்காலத்திலும் பாதுகாப்பை உறுதிப்படுத்த நாம் அர்ப்பணிப்புடன் பாடுபடுவோம் என இராணுவ தளபதி குறிப்பிட்டார்.

Web Design by The Design Lanka