புதிதாக 5 000 பேருக்கு ஆசிரிய நியமனங்கள் » Sri Lanka Muslim

புதிதாக 5 000 பேருக்கு ஆசிரிய நியமனங்கள்

IMG_20190817_100028

Contributors
author image

Editorial Team

13 வருட கட்டாயக் கல்வியின் வேலைத்திட்டத்திற்காக புதிதாக ஐயாயிரம் ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற அடுத்த ஆண்டிற்கான இலவச பாட நூல் விநியோகிக்கும் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கல்வியமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் இதனைக் தெரிவித்தார்.thumbnail 1

இந்த ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக நிதி அமைச்சின் செயலாளரினால் கல்வி அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில் கல்வித்திட்டத்திற்காக இதற்கு முன்னர் 1500 ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டதாகவும் கல்வியமைச்சர் தெரிவித்தார்.

13 வருட கட்டாயக் கல்வியின் ஊடாக உயர் தரத்தில் தொழில் துறைசார்ந்த 26 பாடவிதானங்கள் அறிமுகப்படுத்தப் பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அவர்களுக்கான தொழில் பயிற்சிக் காலத்தில் நாளொன்றிற்கு 500 ரூபா வீதம் வழங்கவும் கல்வியமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றும் கல்வியமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் கூறினார்.

Web Design by The Design Lanka