நாட்டு மக்களுக்கு சோத்துக்கும் வழியில்லை; ஆனால் » Sri Lanka Muslim

நாட்டு மக்களுக்கு சோத்துக்கும் வழியில்லை; ஆனால்

politics

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Ashroff sihabdeen


உலகம் முழுக்க கடன் வாங்கி வாங்கி நாட்டை அபிவிருத்தி செய்ததா சொல்லிக்கிட்டிருந்தாங்க..

அப்புறம் அரசியல் நடத்தின அழகில் அமெரிக்கா, சீனா, இந்தியா என்று முக்கோணத்துக்குள்ள நாட்டைக் கொண்டு வந்து வச்சிட்டாங்க..

அபிவிருத்தி செய்ததாகச் சொல்லப்பட்ட நாட்டில் சோத்துக்கு வழியில்லாம மக்கள் தற்கொலை வரை போயிருக்காங்க..

இப்ப என்னடான்னா..

நாட்டின் பாதுகாப்பாம்.. பாதுகாக்கணுமாம்.

பாதுகாக்கத்தான் வேணும்..

சாப்பிட வழியில்லாத மக்கள் உள்ள தேசத்துக்கு முதல் எது தேவை என்று பேசுகிறார்களில்லை.

என்னமோ சிறுபான்மைக்கிட்ட இருந்து நாட்டைப் பாதுகாத்திட்டா எல்லாப் பெரும்பான்மை மக்களுக்கும் எல்லாம் கிடைக்கும் என்கிற மாதிரியான போக்கில் அரசியல் காய் நகர்த்துகிறார்கள்..

வெறுமே அதிகாரத்துக்கு வருவதற்கு மட்டுமே இந்தக் கதையெல்லாம் என்பதை எல்லா மக்களும் என்று புரிந்து கொள்வார்களோ அன்றுதான் மக்கள் பிரச்சனை தீரும்!

Web Design by The Design Lanka