எதிர்வரும் சில மணித்தியாலங்களில் மழை » Sri Lanka Muslim

எதிர்வரும் சில மணித்தியாலங்களில் மழை

IMG_20190818_062539

Contributors
author image

Editorial Team

மன்னாரிலிருந்து காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடல் பிரதேசத்தில் எதிர்வரும் சில மணித்தியாலங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள கடல் பிரதேசங்களில் கடுங்காற்று வீசக்கூடும் என்பதனால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது

.நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

மன்னாரிலிருந்து காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஆழம் கூடிய கடற்பரப்புகளில் ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Web Design by The Design Lanka