தேர்தலுக்கு முன்னர் நியமனத்தை வழங்க வேண்டும்’ » Sri Lanka Muslim

தேர்தலுக்கு முன்னர் நியமனத்தை வழங்க வேண்டும்’

ranil

Contributors
author image

Editorial Team

பட்டதாரிகளிடத்தே பாகுபாடு காட்டாமல் தேர்தல் வருவதற்கு முன்னர் அனைத்துப் பட்டதாரிகளுக்கும் நியமனத்தை வழங்க வேண்டுமென, வடக்கு மாகாண பட்டதாரிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்தள்ளனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ். மாவட்டச் செயலகத்தில் கலந்துகொண்டிருந்த தருணத்தில், பட்டதாரி நியமனங்கள் அனைவருக்கும் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவே, வட மாகாண பட்டதாரிகள் யாழ். மாவட்ட செயலகத்துக்கு அருகில் கூடியிருந்தனர்.

இந்நிலையில், பட்டதாரிகள் சங்க உறுப்பினர்கள் சிலரை வரவழைத்து பிரதமர் சில நிமிடங்கள் பேச்சு நடத்தியுள்ளார். இதன்போது மகஜர் ஒன்றும் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

சந்திப்பு தொடர்பாக கருத்துத் தெரிவித்த வட மாகாண பட்டதாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள், வேலையற்றப் பட்டதாரிகள் அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்படுபவர்கள் அல்லர். பட்டதாரிகளில் உளவாரி, வெளிவாரி என்ற பகுபாடு எதற்கு, இலங்கையிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழங்களும் அரசாங்கத்தின் உடமை பின்பு எதற்கு வேறுபாடு. நல்லாட்சி செய்யும் அரசாங்கம் என் மார்பு தட்டிப் பேசுகிறீர்கள். அது உண்மையாக இருந்தால் இதுவரை பட்டம் பெற்றவர்களுக்கு தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் நியமனங்களை வழங்குங்குங்கள்.

முன்னைய அரசாங்கம் 50 அல்லது 60 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கிய வரலாறு உண்டு. அவர்களை கொடுங்கோல் ஆட்சியாளர்கள் என்று கூறுகின்றீர்கள். இந்த அரசியல் தமிழ் அமைச்சர்களும் இருக்கிறார்கள். நியமனம் வழங்கப்பட்டவர்கள் தவிர எஞ்சிய சொற்பமானவர்களே உள்ளனர்.

இந்த நியமனத்தை வழங்காது விட்டால், அரசாங்கத்தின் தலைவிதியை மாற்றும் வல்லமை மாணவர்களிடம் உள்ளது என்பதை மறவாதீர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Web Design by The Design Lanka