சட்டவிரோத மதுபானம் - பொதுமக்கள் தகவல்களை வழங்குவதற்கு தொலைபேசி இலக்கம் » Sri Lanka Muslim

சட்டவிரோத மதுபானம் – பொதுமக்கள் தகவல்களை வழங்குவதற்கு தொலைபேசி இலக்கம்

IMG_20190819_083822

Contributors
author image

Editorial Team

சட்டவிரோத மதுபானம் குறித்து பொதுமக்கள் தகவல்களை வழங்குவதற்கு வசதியாக கலால் திணைக்களம் 24 மணித்தியாலமும் செயற்படும் விசேட தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் தொலைபேசி இலக்கம் 1913 ஆகும்.

சட்டவிரோத மதுபானம் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகளைப் பெற்றுக் கொள்வதற்காக 24 மணித்தியாலமும் செயற்படும் விசேட தொலைபேசி இலக்கத்தைச் செயற்படுத்துவதற்கு கலால் திணைக்களம் தீர்மானித்ததன் காரணமாக இந்தத் தொலைபேசி இலக்கத்தை திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

பொதுமக்களினால் வழங்கப்படும் முறைப்பாடுகளின் இரகசியத் தன்மை பாதுகாக்கப்படுவதுடன் சட்டவிரோத மதுபானம் விநியோகம் மற்றும் வைத்திருத்தல் தொடர்பில் முறைப்பாடுகளைத் தெரிவிக்க முடியும் என்று கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் எச்.பி.சுமணசிங்ஹ தெரிவித்துள்ளார்.

அனுமதிப்பத்திரத்துடன் தயாரிக்கப்படும் மதுபானம் கூட உரிய அளவுக்கு அதிகமாக வைத்திருப்பது தடை என்றும் தெரிவித்த அவர், இவ்வாறான சந்தர்ப்பங்கள் தொடர்பில் பொதுமக்களால் முறைப்பாடு செய்ய முடியும் என்றும் கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் எச்.பி.சுமணசிங்ஹ மேலும் கூறினார்

Web Design by The Design Lanka