யாழ்ப்பாணத்தில் காணாமல் போன ஆட்கள் பற்றிய பிராந்திய அலுவலகம் » Sri Lanka Muslim

யாழ்ப்பாணத்தில் காணாமல் போன ஆட்கள் பற்றிய பிராந்திய அலுவலகம்

IMG_20190821_095620

Contributors
author image

Editorial Team

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP) தனது பிராந்திய அலுவலகத்தை இல. 124 ஆடியபாதம் வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரியில் 2019 ஆவணி மாதம் 24ம் திகதியன்று ஆரம்பிக்கவுள்ளது.

இவ் அலுவலகம் கா.போ.ஆ. பற்றிய அலுவலகத்தின் மூன்றாவது பிராந்திய அலுவலகமாகும். தற்போது கா.போ.ஆ. பற்றிய அலுவலகமானது மாத்தறையிலும்இ மன்னாரிலும் பிராந்திய அலுவலகங்களைக் கொண்டுள்ளது. இவ்வாரம்ப விழாவானது பாராளுமன்ற சபாநாயகரும் அரசியலமைப்பு சபையின் தவிசாளருமான கரு ஜயசூரியா அவர்களது ஆதரவின் கீழ் நடைபெறவுள்ளது. அமைச்சர் மனோ கணேசன் அவர்களும் இதில் பங்குபற்றுவார்கள்.

இலங்கையில் காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களது கதியையும் அவர்கள் எங்கிருக்கின்றனர் என்பதை அறிந்துகொள்வதையும் தனது பிரதான பணிப்பாணையாக கா.போ.ஆ. பற்றிய அலுவலகம் கொண்டுள்ளது.

கா.போ.ஆட்கள் பற்றிய அலுவலகம் நிறுவப்பட்டமையானது பல்வேறு சூழ்நிலைகளில் கடந்த நான்கு தசாப்தங்களாக பரவலாக ஏற்பட்ட காணாமல் போனமையை அங்கீகரிப்பதுடன் பாதிக்கப்பட்ட நம் நாட்டின் ஆயிரக்கணக்கான குடிமக்களுக்கு பதிலளிக்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது என்பதையும் ஏற்றுக்கொள்வதாகும்.

காணாமல் போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் இலகுவாக கா.போ.ஆ.பற்றிய அலுவலகத்தை அணுகுவதற்கு பிராந்திய அலுவலகங்கள் பெரிதும் உதவியாக இருக்கும்.

அவை குடும்ப உறுப்பினர்கள் சமர்ப்பிக்கும் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வது உட்பட குடும்ப உறுப்பினர்கள் மாவட்ட ரீதியாக அரச அலுவலகங்களில் நிர்வாகம் தொடர்பாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பின்தொடர்வதுடன், தனிப்பட்ட வழக்குகள் சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொள்வதுமான பலதரப்பட்ட சேவைகளை வழங்கும்.

இவ்வாறு கா.போ.ஆ. பற்றிய அலுவலகமானது தொடர்ந்து தன் அலுவலகங்களை நிறுவி பாதிக்கப்பட்டவர்களினதும் அவர்களது குடும்பத்தினரதும் உரிமைகளைப் பாதுகாப்பதில் முழுமுயற்சியுடன் செயற்பட்டு, காணாமல்போன, காணாமல் ஆக்கப்பட்டவர்களினதும் அவர்களின் குடும்பத்தினரினதும் உரிமைகளை பாதுகாத்தும் தனது பணிப்பானையை நிறைவேற்றுவதை குறிக்கோளாக கொண்டுள்ளளது.

Web Design by The Design Lanka