வேட்பாளர் பட்டியிலில் நான்கு பேர் இருக்கிறார்கள் » Sri Lanka Muslim

வேட்பாளர் பட்டியிலில் நான்கு பேர் இருக்கிறார்கள்

1541645360-unp-2

Contributors
author image

Editorial Team

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியும் மக்கள் விடுதலை முன்னணியும் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்து விட்டன என்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளரை அவசரமாக அறிவிக்க வேண்டும் என்று எந்த அவசியமும் கிடையாது.

தற்போதே எங்களின் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று கேட்பது முட்டாள் தனமானதாகும்.

எங்களின் வேட்பாளர் பட்டியிலில்  நான்கு பேர் இருக்கிறார்கள். கட்சியின் இறுதித் தீர்மானத்துக்கு அமைய சரியான நேரத்தில் வேட்பாளரை அறிவித்து வெற்றியை நிலைநாட்டுவோம் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பனர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹேஷா விதானகே, சமிந்த விஜயசிறி, பாலித ரங்கே பண்டார மற்றும் ஆசு மாரசிங்க ஆகியோர்  இரு ஊடகவியலாளர் சந்திப்புகளை நேற்று புதன் கிழமை அலரிமாளிகையில் நடத்தினர்.

Web Design by The Design Lanka