தொழிற்பயிற்சி என்பது ஒரு முக்கியமான விடயமாக மாறியுள்ளது » Sri Lanka Muslim

தொழிற்பயிற்சி என்பது ஒரு முக்கியமான விடயமாக மாறியுள்ளது

ranil

Contributors
author image

Editorial Team

உயர்மட்டத்திலான புதிய தொழில்நுட்பங்களையும், தொழில்களையும் பாதுகாக்கும் வகையில் தற்போது உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்கி வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவற்றில் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும் குறைந்துள்ளன. கொழும்பு தாமரைத்தடாக அரங்கில் நேற்று இடம்பெற்ற தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனத்தின் மூன்றாவது சிறப்பு விருது விழா நிகழ்வின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போது உலகின் அனைத்து இடங்களிலும் தொழில் பாதுகாப்புக் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தமது ஊழியர்களை பாதுகாத்து தொழில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு சரியான பயிற்சி அவசியம் எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

புதிய இயந்திர உபகரணப் பாவனை தொடர்பான பயிற்சி மூலம் தொழில் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். இலங்கை ஒரு நடுத்தர வருமானம் பெறும் நாடாகும். இதனால் தொழிற்பயிற்சி என்பது ஒரு முக்கியமான விடயமாக மாறியுள்ளது. இதற்கென பல நிறுவனங்கள் நாடு பூராகவும் இயங்கி வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தொழில் மற்றும் தொழில்நுட்ப பயிற்சியை வழங்குவதற்காக அரசாங்கம் பாரிய அளவில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளவதாகவும் பாடசாலை மட்டத்திலும் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் 13 வருட கட்டாயக் கல்வியை அமுல்படுத்தியுள்ளது. சாதாரண தரப் பரீட்சையின் பின்னர் 50 சதவீதமான மாணவர்கள் பாடசாலையை விட்டு விலகிச் செல்கின்றனர். அவர்களை தொழில் ரீதியாக ஊக்குவித்து பயிற்சி பெற்ற ஊழியர்களாக மாற்ற முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Web Design by The Design Lanka