குண்டுதாரி வைப்பீடு செய்துள்ள 20 இலட்சம் ரூபா » Sri Lanka Muslim

குண்டுதாரி வைப்பீடு செய்துள்ள 20 இலட்சம் ரூபா

Court

Contributors
author image

Editorial Team

கொழும்பு சினமென் கிராண்ட் ஹோட்டலில் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட குண்டுதாரியான மொஹமட் இப்ராஹிம் இன்சாம் அஹமட் என்பவர் தன்னியக்க குண்டுதாரி 20 இலட்சம் ரூபா வழங்கியதாக கூறப்படும் எம்.முவ்பாஹில் என்பவர் மேலும் சிலருடன் பணக்கொடுக்கல் வாங்கலை மேற்கொண்டிருப்பதாக முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பான விடயங்களை கண்டறிவதற்கு வங்கிகள் பலவற்றின் கணக்கறிக்கைகளை பெற்றுத்தருமாறு பொலிஸார் கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்கவிடம் கேட்டுக்கொண்டிருந்தது.

அத்தோடு இதற்கான அனுமதியினை நீதவான் வழங்கியிருந்தார். இவரது கணக்கில் குண்டுதாரர்களினால் 20 இலட்சம் ரூபா வைப்பிடப்பட்டிருப்பதாக விசாரணையில் இருந்து தெரியவந்திருப்பதாக புலனாய்வுப்பிரிவினர் தெரிவித்து இரகசிய பொலிசார் இந்த உத்தரவை கோரி இருந்தனர்.

குண்டுதாரி வைப்பீடு செய்துள்ள 20 இலட்சம் ரூபாவில் 6 இலட்சம் ரூபாவை இவரது மனைவி பெற்றுக்கொண்டிருப்பதாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அது தொடர்பான அறிக்கையை செப்டெம்பர் மாதம் 18 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம்

Web Design by The Design Lanka