தாய்நாட்டின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு, ஒற்றை ஆட்சி » Sri Lanka Muslim

தாய்நாட்டின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு, ஒற்றை ஆட்சி

IMG_20190823_095000

Contributors
author image

Editorial Team

தாய்நாட்டின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி என்பனவற்றை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா வலியுறுத்தியுள்ளார்.

தாய்நாட்டின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு, ஒற்றை ஆட்சி என்பனவற்றை பாதுகாப்பதற்காக இராணுவத்திற்கு தலைமைத்துவம் அளிப்பதை தமது பிரதான பணியாக கருதுவதாகவும் அவா கூறினார்.

பிரஜைகளின் சுதந்திரத்தை பாதுகாப்பது சுதந்திரமான ஜனநாயகத்துடன் கூடிய சூழலை உருவாக்குவது என்பன பிரதான பொறுப்புக்களாகும்.

உள்நாட்டு, வெளிநாட்டு ரீதியிலான அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்கக்கூடிய வகையில்; செயற்படுவது அவசியமாகும். அனைத்து இனத்தவர்களையும் ஒரு தாய் மக்களாகக் கருதி, சகவாழ்வு, நல்லிணக்கம், சகோதரத்துவம் என்பனவற்றுக்கான உரிமைகளை உறுதிப்படுத்துவது அவசியமாகும் என இராணுவத் தளபதி வலியுறுத்தினார்.
பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது, அதற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவது தமது இரண்டாவது பணியாகும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அனைவரது நலனுக்காக செயற்பட்டு இராணுவ வீரர்களின் குடும்பங்களின் நலனுக்காக தேவைகளை பூர்த்தி செய்வது தமது மூன்றாவது இலக்காகும் என்றும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

Web Design by The Design Lanka