ஆங்கில மொழி, கணனி அறிவின் மூலம் இளைஞர் சந்ததி வலுவூட்டப்பட வேண்டும் » Sri Lanka Muslim

ஆங்கில மொழி, கணனி அறிவின் மூலம் இளைஞர் சந்ததி வலுவூட்டப்பட வேண்டும்

IMG_20190823_145610

Contributors
author image

Editorial Team

ஆங்கில மொழி மற்றும் கணனி அறிவின் மூலம் இளைஞர் சந்ததி வலுவூட்டப்பட வேண்டுமென சபாநாயகர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டினார்.

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் 2வது டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மாறி வரும் உலகிற்கு ஏற்ப இளம் சந்ததி மாற வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார். உலக திறன் சுட்டியில் இலங்கை 82வது இடத்தில் இருப்பதாகவும், இலங்கை தெற்காசியாவில் முன்னணி இடத்தில் இருப்பதாகவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் றிசாட் பதியுதீன் குறிப்பிட்டார்.

இளம் சந்ததியினர் அரச தொழில் வாய்ப்புக்களை எதிர்பார்க்கும் மனோநிலையில் இருந்து விலக வேண்டிய காலம் உருவாகியிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தொழிற்பயிற்சி அதிகார சபையின் அனைத்துப் பாடநெறிகளும் இலவசமாக வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தொழிற்கல்வி, கைத்தொழில் மற்றும் உள்ளக வர்த்தகம் ஆகிய மூன்று துறைகளுக்காகவும் முதல் தடவையாக எதிர்வரும் தினங்களில் தேசிய கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என்று இராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரண குறிப்பிட்டார்.

நாடு முன்னேற்றமடைய வேண்டுமானால், தொழில் செய்யும் சமூகமொன்று அவசியம் எனவும், தொழில் செய்யும் சமூகத்திற்கு திறன்களும், எண்ணங்களும், திறமைகளும் விருத்தியடைந்த ஓர் இளம் சந்ததி அவசியம் என்று பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்தார்.

Web Design by The Design Lanka