நாட்டின் பாதுகாப்பு” என்று சிலர் வெற்றி பெற நினைக்கிறார்கள் » Sri Lanka Muslim

நாட்டின் பாதுகாப்பு” என்று சிலர் வெற்றி பெற நினைக்கிறார்கள்

politics

Contributors
author image

Editorial Team

Ashroff sihabdeen


“நாட்டின் பாதுகாப்பு” என்ற படத்தை ஓட்டி ஜனாதிபதி வேட்பாளர்கள் சிலர் வெற்றி பெற நினைக்கிறார்கள். இதனடிப்படையில் பெரும்பான்மை இன வாக்காளர்களுக்கு அவர்கள் தெரிவிக்கும் உள்ளார்ந்த தகவல் என்னவெனில் முஸ்லிம்களை ஒரு வழி பண்ணுவது என்பதுதான்.

ஒரு சில வேட்பாளர்களின் ஆங்காங்கு தெரிவிக்கும் கருத்துக்களிலும் வேட்பாளர்களோடு நல்லதொரு அமைச்சை எதிர்பார்த்து இணைந்திருக்கும் ஒரு சில பெரும்பான்மை அரசியல்வாதிகளின் அறிக்கைகளிலும் இதைத்தான் என்னால் உணர முடிகிறது!

இந்தப் படத்தை ஓட்டுவதில் பல நன்மைகள் அவர்களுக்கு உண்டு. நாட்டு மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் விலை வாசி மற்றும் பல்வேறு வாழ்க்கைப் பிரச்சனைகளிலிருந்து அவர்களைத் திருப்பி விடுவதன் மூலம் சுகபோகமாக வாழ்ந்து விட்டுப் போவதற்கு இந்தப் படம் மிகச் சிறந்தது.

வருடாவருடம் இன்னொரு ஆயிரம் கோடியால் பட்ஜட்டில் துண்டு விழுவதைத் தடுக்க, வேலையில்லாப் பிரச்சனை தீர்க்க, ஆகக்குறைந்தது அன்றாட உணவுப் பொருட்களைக் கட்டுப்பாட்டு விலைக்குக் கொண்டு வர யோசனைகளை யாராவது முன் வைக்கிறார்களா என்பதை அவதானியுங்கள்!

நாட்டை மேம்படுத்துவோம் என்ற ஒற்றை வார்த்தைக்குள் எல்லாவற்றையும் புதைத்து விட்டு ஏதோ எண்ணெய்க் கிணறுகளால் நிரம்பி வழியும் தேசத்தைப் பாதுகாக்கப் போவது போல்தான் அறிக்கை விட்டு்க் கொண்டும் பேசிக் கொண்டிருப்பார்கள். விஞ்ஞாபனங்களும் அப்படித்தான் இருக்கும்!

ஜயவேவா!

Web Design by The Design Lanka