உலக நாடுகளின் கோரிக்கை ஏற்பு.. மரண தண்டனையிலிருந்து தப்பியது கர்ப்பிணி பசு பென்கா » Sri Lanka Muslim

உலக நாடுகளின் கோரிக்கை ஏற்பு.. மரண தண்டனையிலிருந்து தப்பியது கர்ப்பிணி பசு பென்கா

penka-1528197094-1528885224

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்


ஐரோப்பாவில் எல்லை தாண்டி சென்ற கர்ப்பிணி பசுவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் உரிய ஆவணம் இல்லாமல் எல்லைத் தாண்டினால் மரண தண்டனை விதிக்கப்படும் சட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஒன்று பல்கேரியா. பல்கேரிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மஸாராசிவோ கிராமத்தைச் சேர்ந்தவர் இவான் ஹரலம்பியேவ்.

இவர் ஏராளமான பசுக்களையும், மாடுகளையும் வளர்த்து வருகிறார். இவரது மந்தையில் பென்கா என்ற கர்ப்பிணி பசுவும் உள்ளது.

எல்லை தாண்டிய பென்கா
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேய்ச்சலுக்கு சென்ற பென்கா, பல்கேரிய எல்லையைத் தாண்டி செர்பியாவிற்குள் நுழைந்தது. செர்பியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத நாடு என்பதால் பசு எல்லைத்தாண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து ஐரோப்பிய அதிகாரிகள் எல்லைத் தாண்டிய கர்ப்பிணி பசுவான பென்காவிற்கு மரண தண்டனை விதித்தனர். இந்நிலையில் எல்லை தாண்டிய காரணத்துக்காக பசுவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பென்காவிற்கு பிரசவ காலம் நெருங்கியதால் அது உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. கர்ப்பிணி பசுவான பென்காவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

விலக்கு அளிக்க வேண்டும்
கர்ப்பிணியான பென்காவின் நிலையை கருத்தில் கொண்டு ஐரோப்பிய பாராளுமன்றம் மரண தண்டனையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் ஆதரவு திரட்டப்பட்டு வந்தது.

மரண தண்டனை ரத்து தப்பிய பென்கா
30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு பென்காவின் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு பல்கேரிய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் உலகம் முழுவதிலும் இருந்து வந்த கோரிக்கையை ஏற்ற பல்கேரிய அரசு கர்ப்பிணி பசுவின் மரண தண்டனையை ரத்து செய்துள்ளது

Web Design by The Design Lanka