புனித ஹஜ் கடமைக்கான ஹாஜிகளை உத்தியோப பூர்வமாக வழியனுப்பி வைக்கும் நிகழ்வு » Sri Lanka Muslim

புனித ஹஜ் கடமைக்கான ஹாஜிகளை உத்தியோப பூர்வமாக வழியனுப்பி வைக்கும் நிகழ்வு

01

Contributors
author image

A.S.M. Javid

இவ்வருட புனித ஹஜ் கடமைக்கான ஹாஜிகளை உத்தியோப பூர்வமாக வழியனுப்பி வைக்கும் நிகழ்வு நேற்று (26) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தலைமையில் இடம் பெற்றது.

இதன்போது அமைச்சர் ரவுப் ஹக்கீம், பிரதி அமைச்சர்களான பைஸல் ஹாசிம், அலிஸாஹிர் மௌலானா, இலங்கைக்கான சவுதி அரேபிய தூதரகத்தின் தூதுவர் அப்துல் நாஷர் எச். அல்- ஹாரிதி, சவுதி எயார் லைன்ஸின் வமான நிலையப் பொறுப்பாளர் செல்வி. லக்மாலி, முகாமைத்துவப் பணிப்பாளர் கரிம் ஷம்ஸ், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஆர்.எம்.மலிக், ஹஜ் குழு தலைவர் ஸியாத், உறுப்பினர்களான பாஹிம் ஹாசிம்,மௌலவி தாஸிம், அமைச்சின் முஸ்லிம் பிரிவுப் பணிப்பாளர் அஷ்ரப், அமைச்சரின் ஆலோசகர் முயுனுதீன், சவுதி அரேபியாவின் இலங்கைத் தூதரகத்தின் அதிகாரிகள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அதிகாரிகள், ஹஜ் முகவர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

வழியனுப்பி வைக்கும் நிகழ்வில் விமன பயனச் சீட்டை அமைச்சர் ஹலீம் மற்றும் தூதுவர் ஆகிய இருவரும் ஹாஜிகளுக்கு வழங்கி வைப்பதுடன் ஹேக் வெட்டி வருகைதந்தவர்களுக்கு தேனீர் விருந்துபசாரமும் அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை இலங்கையிலிருந்து சுமார் 3000 ஹாஜிகள் புனித ஹஜ் கடமைக்காக செல்கின்றனர்.

அடுத்த மாதம் ஆகஸ்ட் 17ஆம் திகதி வரை இலங்கை ஹாஜிகள் பயனிக்கவுள்ளர். அதேவேளை புனித ஹஜ் கடமையை முடித்த முதலாவது தொகுதி ஹாஜிகள் அடங்கிய குழுவினர் எதிர்வரும் ஆகஸ்ட் 27ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர் 15ஆம் திகதி வரை தாயகம் திரும்பவுள்ளனர்.

இலங்கைக் ஹாஜிகளுக்கு வழமை போன்று மருத்துவ சேவையை வழங்குவதற்கு மருத்துவக் குழுவினரும், ஒரு தொகுதி மருந்து வகைகளும் இங்கிருந்து அனுப்பி வைக்கப்படவுள்ளது. முதலாவது மருத்துவக் குழுவினர் இம்மாதம் 30ஆம் திகதி இங்கிருந்து செல்கின்றனர். இவர்கள் மக்கா, மதீனா, மினா, அறபா போன்ற இடங்களில் இலங்கைக் ஹாஜிகளுக்கு தமது இலவச மருத்துவ சேவையை வழங்கவுள்ளனர்.

மருத்துவ சேவையை பெற விரும்புபவர்கள் தங்களது குறித்த ஹஜ் முகவர்களிடமிருந்து இலங்கை மருத்துவக் குழுவினர் சேவை வழங்கும் இடங்களைக் கேட்டறிந்து கொள்ளலாம்.

20180726_171757

01

Web Design by The Design Lanka